Published : Apr 09, 2025, 10:55 AM ISTUpdated : Apr 09, 2025, 11:00 AM IST
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அது என்ன படம்; யார் இயக்கத்தில் அவர் நடித்தார் என்பதை பற்றி பார்க்கலாம்.
Latha Rajinikanth Acted in Tamil Movie : தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது 74 வயது ஆனாலும் இந்த வயசிலும் செம பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதேபோல் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் மறுபுறம் பிசியாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.
24
Rajinikanth Wife Latha
ரஜினி - லதா காதல்
நடிகர் ரஜினிகாந்துக்கு 1981-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் லதா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூப்பர்ஸ்டார் நடிகராக இருந்தபோது அவரை பேட்டி எடுக்க வந்த ஒரு கல்லூரி மாணவி தான் லதா. அப்போது இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. திருமணமாகி 44 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் ரஜினிக்கு தன்னுடைய மனைவி மீதுள்ள காதல் குறையவில்லை. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உண்டு.
ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாதாம். அப்போது தன்னுடைய மகள்களையும் பார்த்துக் கொண்டு, குடும்பத்தையும் நிர்வகித்து வந்துள்ளார் லதா ரஜினிகாந்த். இவருக்கு பாடல் பாடுவதிலும் ஆர்வம் அதிகம். ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் கூட லதா ரஜினிகாந்த் பாடி இருந்தார். அவர் பாடிய பாடலை கேட்டிருக்கிறோம். ஆனால் அவர் ஒரு படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
44
Latha Rajinikanth Acted in Agni Sakshi Movie
லதா ரஜினிகாந்த் நடித்த ஒரே ஒரு தமிழ் படம்
ரஜினிக்கு ஜோடியாக லதா ரஜினிகாந்த் நடித்த படம் அக்னி சாட்சி. கடந்த 1982-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இதில் சிவக்குமார், சரிதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ரஜினிகாந்த், ரஜினியாகவே கேமியோ ரோலில் நடித்திருப்பார். அதில் ரஜினியின் மனைவியாக லதா ஒரு காட்சியில் மட்டும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். லதா ரஜினிகாந்த் நடித்த ஒரே ஒரு தமிழ் படம் இதுவாகும். இதில் கமல்ஹாசனும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.