சிறிய பட்ஜெட் படம் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரையில் திரைக்கு வந்து ஒரு மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகின்றன. வாரந்தோறும் புதிய படங்களின் வருகையும் ஓடிடி ரிலீஸ் படங்களின் வருகையும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் நாளை 10ஆம் தேதி அஜித் நடிப்பில் உருவாகியிருக்க கூடிய குட் பேட் அக்லீ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் வருகை காரணமாக பல படங்கள் ரிலீஸில் இருந்து பின்வாங்கி விட்டன.
24
Sweetheart OTT Release on April 14th
ஸ்வீட்ஹார்ட்:
அந்த வகையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி வெளியான படம் தான் ஸ்வீட்ஹார்ட். சிறிய பட்ஜெட் படமான இந்தப் படத்தில் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி ரோலில் நடிக்க, இப்படத்தின் மூலமாக ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்குநராக அறிமுகமானார்.
மேலும், இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். அதோடு இந்த படத்தின் இசை பணிகளையும் அவரே கவனித்தார். காதல் மற்றும் உறவுகளை மையப்படுத்திய இந்தப் படம் உணர்வு பூர்வமான காதல் காட்சிகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி திருமணத்திற்கு முன்னதாக காதல் ஜோடிகள் உறவு வைத்துக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பேசியது.
44
Jio Hot Star and Simply South
ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளங்களில் ரிலீஸ்:
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு தற்போது . இந்த அறிவிப்பின்படி வரும் 11 ஆம் தேதி ஸ்வீட் ஹார்ட் படம் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளங்களில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ('Sweet Heart' OTT release date announced) . சமீப காலமாக ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. ( Watch from April 11th) மேலும் காதல் தொடர்பான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். ஜோ படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்து வெளியான படம் தான் ஸ்வீட் ஹார்ட். இந்தப் படத்திற்கு பிறகு ஆண் பாவம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.