ஷங்கர் வழியில் அட்லீ
இயக்குனர் அட்லீ, ஷங்கரை காப்பியடித்து தான் குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார் என நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இயக்குனர் ஷங்கர் (Director Shankar) தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் காதல் படத்தை இயக்கினார். அட்லீ இயக்குனராக எண்ட்ரி கொடுத்ததே ராஜா ராணி என்கிற காதல் படத்தின் மூலம் தான். அதேபோல் ஷங்கர் மெல்ல மெல்ல சமூக கருத்துள்ள கமர்ஷியல் படங்களை எடுக்க தொடங்கினார்.
அட்லீயும் தெறி படத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றியும், மெர்சலில் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல் பற்றியும், பிகில் படத்தில் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பெண்கள் பற்றியும், ஜவானில் விவசாய பிரச்சனை என தொடர்ந்து சமூக கருத்துள்ள படங்களை கொடுத்து தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார்.