எங்க போனாலும் ஸ்கூல் பையன் மாதிரி பேக் மாட்டிக்கொண்டே சுற்றும் பாலய்யா - அதில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா?

Secret behind Balakrishna Bag : தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா, எப்போதும் பேக் ஒன்றை முதுகில் மாட்டி இருப்பார் அதன் பின்னணியை பார்க்கலாம்.

Balakrishna Bag Secret

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவரது படங்களை தமிழ்நாட்டில் மீம் போட்டு கலாய்த்தாலும் தெலுங்கில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. டிரெயினை ஒற்றை விரலால் நிறுத்துவது, காலால் மிதித்தே காரை பறக்கவிடுவது என பாலகிருஷ்ணா படங்களில் செய்யும் அட்ராசிட்டிக்கள் ஏராளம். அவர் செய்யும் இந்த கிரிஞ்சான விஷயங்களை ரசிக்க ஒரு படையே உள்ளதால் அதை படங்களில் தொடர்ந்து செய்து வருகிறார் பாலகிருஷ்ணா.

Telugu Actor Balakrishna

ரசிகர்களால் செல்லமாக பாலய்யா என அழைக்கப்படும் இவர், எப்போது வெளியே சென்றாலும் தன் தோளில் ஒரு ஸ்கூல் பேக் ஒன்றை மாட்டிக் கொள்வார். அதில் அப்படி என்னதான் வைத்திருப்பார் என்று புரியாத புதிராகவே இருந்தது. இந்த நிலையில் அவரின் மருமகன் ஸ்ரீ பரத் என்பவர் பாலகிருஷ்ணா ஏன் அந்த பேக்கை தவறாமல் எடுத்துச் செல்கிறார். அப்படி அந்த பேக்கில் என்னதான் வைத்திருக்கிறார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... திருமணம் செய்வதில் வனிதாவுக்கே டஃப் கொடுத்த பிரபல நடிகை!! அதுக்குன்னு இத்தனை தடவையா!


Nandamuri Balakrishna

அதன்படி பாலகிருஷ்ணாவுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். அதிலும் குறிப்பாக Mansion House என்கிற பிராண்ட் சரக்கை தான் அவர் விரும்பி குடிப்பாராம். அதனால் அவர் எங்கு சென்றாலும் அந்த சரக்கு பாட்டிலையும் கையில் எடுத்துச் செல்வாராம். வெளிநாட்டுக்கே சென்றாலும் அந்த மதுபாட்டிலை எடுத்துச் சென்றுவிடுவாராம் பால கிருஷ்ணா. இதில் மற்றுமொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால் அதனுடன் சுடுதண்ணீரையும் பேக்கில் வைத்திருப்பாராம்.

Balakrishna Drinking Habbit

அந்த சரக்குடன் சுடு தண்ணீரை மிக்ஸ் பண்ணி குடிக்கும் பழக்கம் பாலகிருஷ்ணாவுக்கு உள்ளதாம். இதனால் தான் அந்த பேக்கை எங்கு சென்றாலும் பாலய்யா தன் கையிலேயே வைத்துக் கொண்டிருப்பதாக ஸ்ரீ பரத் கூறி உள்ளார். மேலும் அவர் Mansion House பிராண்ட் சரக்கை தான் குடிக்கிறார் என்கிற தகவல் வெளியானதும் அந்நிறுவனத்தின் பங்குகள் மளமளவென உயர்ந்ததாகவும் ஸ்ரீ பரத் அந்த பேட்டியில் கூறி இருக்கின்றார்

Secret Behind Balakrishna Bag

பாலகிருஷ்ணா தெலுங்கில் அன்ஸ்டாப்பபில் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களில் ஒருவராக Mansion House நிறுவனம் இடம்பெற்று இருந்தது. தனக்கு குடிப்பழக்கம் இருப்பதை அந்நிகழ்ச்சியிலேயே பாலகிருஷ்ணா ஓப்பனாக கூறி இருக்கிறார். இதுதவிர அண்மையில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற பட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பாலகிருஷ்ணா, கையில் சரக்கையும் கொண்டு வந்தது சர்ச்சையானது. அதுமட்டுமின்றி அந்நிகழ்ச்சியில் அவர் நடிகை அஞ்சலியிடம் அத்துமீறி நடந்துகொண்டதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையும் படியுங்கள்... கமல் ஹாசனின் ரைட் ஹேன்ட் யார் தெரியுமா; இந்த பிரபலத்தின் மனைவிதான்!!

Latest Videos

click me!