அசத்துறாரே பா.. கேப் விடாமல் படங்களை அடுக்கும் "வைகைப்புயல்" - பகத் பாசிலுடன் மீண்டும் ஒரு சம்பவம்!

Ansgar R |  
Published : Sep 12, 2024, 11:53 PM IST

Vadivelu Maareesan : பிரபல நடிகர் வைகைப்புயல் வடிவேலு அடுத்தடுத்து தனது 2 படங்களை அறிவித்துள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

PREV
14
அசத்துறாரே பா.. கேப் விடாமல் படங்களை அடுக்கும் "வைகைப்புயல்" - பகத் பாசிலுடன் மீண்டும் ஒரு சம்பவம்!
Maamannan

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காமெடி கிங்காக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் வடிவேலு. இதுவரை குணச்சித்திரம் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த அவரை, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைகளத்தில் மாறி செல்வராஜ் காட்டிய திரைப்படம் தான் "மாமன்னன்". அந்த திரைப்படம் அதுவரை வடிவேலு மேலிருந்த ஒட்டுமொத்த பிம்பத்தையும் தலைகீழாக மாற்றியது என்றால் அது மிகையல்ல.

ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பார்த்திபனின் "டீன்ஸ்".. இனி OTTயிலும் - லேட்டஸ்ட் அப்டேட்!

24
Gangers movie

பல ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் திரையுலகில் களம் இறங்கிய நடிகர் வடிவேலுவுக்கு, ஒரு கம்ப பேக் கொடுத்த திரைப்படமே அது தான். இந்நிலையில் பிரபல இயக்குனர் சுந்தர்-சி யின் இயக்கத்தில் உருவாகி வரும் "கேங்கர்ஸ்" என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதுமட்டுமல்ல அவருடைய மற்றொரு படம் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.

34
Happy Birthday Vadivelu

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அசத்திய தயாரிப்பு நிறுவனம் தான் ஆர்.பி சவுதிரியின் "சூப்பர் குட் பிலிம்ஸ்". தற்பொழுது மீண்டும் தமிழ் திரை உலகில் "மாரீசன்" என்கின்ற திரைப்படத்தை தயாரித்து, தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி ஒரு கம் பேக் கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில், சுதீஷ் சங்கர் என்பவருடைய இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விரைவில் நடிகர் வடிவேலுவிற்கு "Gangers" மற்றும் "Maareesan" ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

44
Fahadh Faasil

மேலும் இந்த "மாரீசன்"  திரைப்படத்தில் ஏற்கனவே "மாமன்னன்" திரைப்படத்தில் வடிவேலுவுடன் நடித்து அசத்திய பிரபல மலையாள திரைப்பட நடிகர் பகத் பாசில் இணைந்து நடித்திருக்கிறார். இது ஒரு காமெடி கலந்த அட்வென்ச்சர் திரைப்படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த ஒரு திரைப்படத்திற்கு "மாரீசன்" என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அந்த தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பார்த்திபனின் "டீன்ஸ்".. இனி OTTயிலும் - லேட்டஸ்ட் அப்டேட்!

click me!

Recommended Stories