ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பார்த்திபனின் "டீன்ஸ்".. இனி OTTயிலும் - லேட்டஸ்ட் அப்டேட்!
TEENZ Movie : பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனின் "டீன்ஸ்" திரைப்படம் தற்பொழுது OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
TEENZ Movie : பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனின் "டீன்ஸ்" திரைப்படம் தற்பொழுது OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, அவருடைய திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து வந்தவர் தான் பார்த்திபன். அதன்பிறகு கடந்த 1989ம் ஆண்டு வெளியான "புதிய பாதை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவரும் இயக்குனராக தமிழ் திரையுலகில் களம் இறங்கினார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழக அரசு வழங்கும் இரண்டு மாநில விருதுகளையும், ஒரு தேசிய விருதையும் வென்ற வெகு சில இயக்குனர்களில் அவரும் ஒருவராக மாறினார் என்றால் அது மிகையல்ல.
சென்னையில் த்ரிஷா வீட்டை வாங்கியது யார் தெரியுமா? "அந்த" கிளாசிக் தமிழ் நடிகர் தானாம்!
தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் "பொண்டாட்டி தேவை", "சுகமான சுமைகள்", "உள்ளே வெளியே" மற்றும் "புள்ள குட்டிக்காரன்" என்று, அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத, தனது குருநாதர் ஸ்டைலையே மிஞ்சும் அளவிற்கான வித்தியாசமான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களை கொடுத்து, சிறந்த இயக்குனராகவும் நல்ல நடிகராகவும் வலம் வந்தார் பார்த்திபன். அந்த நிலையில் தான் கடந்த 1999ம் ஆண்டு அவருக்கான இரண்டாவது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அவருடைய "ஹவுஸ்புல்" என்ற திரைப்படமும், தமிழக அரசு வழங்கும் இரு மாநில விருதுகளையும், ஒரு தேசிய விருதையும் வென்று அசத்தியது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை உலகநாயகன் கமல்ஹாசனை போலவே வித்தியாசமான பல முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து வரும் பார்த்திபன், கடந்த 2019ம் ஆண்டு "ஒத்த செருப்பு" என்கின்ற திரைப்படத்தை வெளியிட்டார். ஒரே ஒரு நடிகர் மற்றும் படம் முழுக்க தோன்றி நடித்த ஒரு வித்யாசமான படைப்பு அது. டொரண்டோவில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளையும், ஒரு தேசிய விருதையும் வாங்கி அசத்தியது அந்த திரைப்படம்.
இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி, உலகநாயகன் கமல்ஹாசனின் "இந்தியன் 2" திரைப்படம் வெளியான அதே நாளில் வெளியானது பார்த்திபனின் "டீன்ஸ்" திரைப்படம். உண்மையில் இந்தியன் 2 திரைப்படத்தை விட அதிக வரவேற்பு பெற்று படமாக மாறியது "டீன்ஸ்". இந்நிலையில் சுமார் இரண்டு மாத காலம் கழித்து தற்பொழுது OTT தளத்திற்கு அந்த திரைப்படம் வந்திருக்கிறது. இன்று முதல் அமேசான் பிரைம் OTT தளத்தில் அந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கமல் ஹாசனின் ரைட் ஹேன்ட் யார் தெரியுமா; இந்த பிரபலத்தின் மனைவிதான்!!