அவர் தான் இப்போது நடிகை திரிஷா வசித்து வந்த அவரது சென்னை வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், அந்த வீட்டை மிகவும் அழகாக தானும், தனது மனைவியும் பராமரித்து வருவதாகவும், வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ஒரு மினி பார் செட்டப் வைத்துள்ளதாகவும் கூறினார். ஆனால் அது ஒரு அழகு பொருளாக தான் அமைத்துள்ளேன், காரணம் நான் குடிப்பழக்கத்தை விட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றார் அவர்.
மேலும் நீங்கள் இந்த வீட்டை சுற்றி பார்க்கும் பச்சை பசேலன இருக்கும் அனைத்து செடிகளையும் நட்டது என் மனைவி தான். அவருக்கு செடிகள் மீது நிரம்ப ஆர்வம் உண்டு என்று கூறியிருக்கிறார். தன்னுடைய இளைய மகன் டாக்டர் பட்டம் பெற்று விட்டதாகவும், தன்னுடைய மூத்த மகன் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும் பானு சந்தர் கூறியுள்ளார்.
பாத்திமா பாபுவை மிரட்டியது யார்? திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?