Published : Sep 12, 2024, 07:12 PM ISTUpdated : Sep 12, 2024, 08:00 PM IST
செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பார்த்திமா பாபு, தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் திருமணத்திற்கு பின்னர் தனக்கு இருந்த பய உணர்வையும் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் ஒரு இஸ்லாம் குடும்பத்தில் பிறந்து, 25 வருடங்களுக்கு மேலாக டிடி பொதிகை, ஜெயா தொலைகாட்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் பார்த்திமா பாபு. இவர் செய்தியில் தோன்றுகிறார் என்றால், இவருடைய புடவை, அணிகலன்கள், மற்றும் சிகை அலங்காரத்தை பார்க்கவே, இவரின் செய்தியை தவறாமல் பார்க்கும் பெண்கள் பலர் இருந்தனர். அந்த அளவுக்கு எதையும் தனித்தன்மையுடன் செய்து கொள்வதற் பாத்திமா பாபு.
25
News Reader Fathima Babu
முன்னணி செய்திவாசிப்பாளராக இருக்கும் போதே, தமிழில் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக கல்கி என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து பாசமுள்ள பாண்டியரே, VIP, உளவுத்துறை, துள்ளித்திரிந்த காலம், சொல்லாமலே, கல்யாண கலாட்டா, பார்த்தேன் ரசித்தேன், தித்திக்குதே, லேசா லேசா என சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ள பார்த்திமா , சில மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். அதே போல் 25-க்கும் மேற்ப்பட்ட சீரியல்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த அலைபாயுதே, யாரடி நீ மோஹினி, அரண்மனை கிளி போன்ற செயல்கள் தமிழில் மிகவும் பிரபலம்.
அதே போல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இரண்டு வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த பாத்திமா முதல் போட்டியாளராக வெளியேறினார். பொதுவாகவே அதிக வயது கொண்ட போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேற்றுவது வழக்கமான ஒன்று தான், அந்த வகையில் தான் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கு முன்பே பாத்திமா வெளியேற்றப்பட்டார்.
45
Threatening for Fathima Babu
இந்நிலையில் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், பாத்திமா பாபு, இஸ்லாம் மதத்தை சேர்ந்த நான்... இந்து மதத்தை சேர்ந்த கணவர் பாபுவை திருமணம் செய்து கொண்டதால், எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். அதாவது இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால், திருமணமான புதிதில் ஏராளமான எதிர்ப்புகள் இருந்ததாகவும், சிலர் பார்த்திமாவையும், அவரது கணவரையும் ஏதாவது செய்யபோதாக அடிக்கடி மிரட்டல் விடுத்ததாகவும்... இதன் காரணமாக திருமணத்திற்க்கு பின்னர் நாங்க ஹனி மூன் கூட செல்லவில்லை என தெரிவித்துள்ள பாத்திமா பாபு, எங்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தான் வெளியவே தலை காட்டினோம். எங்காவது போக வேண்டும் என்றால் கூட.. யாராவது ஏதாவது தங்களை பண்ணிவிடுவாங்களா? என்கிற பயம் மனதில் இருந்து கொண்டே இருந்ததாக தன்னுடைய சோகமான நாட்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
திருமணமாகி சில வருடங்களுக்கு பின்னரே சுதந்திரமாக வெளியே வர துவங்கிய பாத்திமா பாபு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார், தற்போது இவருக்கு ஆசிக் மற்றும் ஷாருக்கின் என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக இருக்கும் பாத்திமா சமூக வலைத்தளம் மூலம் புடவை பிஸினஸும் செய்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த போது இவரை சுற்றி சில காதல் கிசுகிசுக்கள் சூழ்ந்திருந்தாலும், அதனை சற்றும் காதலில் போட்டுக்கொள்ளாமல் தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுப்பவர் பாத்திமா பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.