"இறுதியாக ஒருமுறை நடிகனாக" தளபதி 69 - ஷூட்டிங் எப்போ? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

First Published | Sep 12, 2024, 7:06 PM IST

Thalapathy 69 Shooting : தளபதி விஜயின் 69வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay as child artist

கலைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக மட்டும் ஆறு திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் தான் விஜய். தன்னுடைய அப்பா இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய விஜய், கடந்த 1992ம் ஆண்டு தமிழில் வெளிய "நாளைய தீர்ப்பு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். "அடச்ச இதெல்லாம் ஒரு மூஞ்சியா, சந்திரசேகருக்கு வேறு வேலையே இல்லையா, இவரை எல்லாம் ஹீரோவாக அறிமுகம் செய்கிறாரே" என் ஏளன குரல்கள் பல எழுந்தது. 

அதற்கு மத்தியில் தன்னுடைய திறமையை நிரூபிக்க புறப்பட்ட இளம் நடிகர் தான் விஜய். தொடர்ச்சியாக அவருடைய நடிப்பில் "செந்தூரபாண்டி", "ரசிகன்", "தேவா", "ராஜாவின் பார்வையிலே" உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. துவக்கத்தில் இருந்தே ஆக்ஷன், காமெடி மற்றும் செண்டிமெண்ட் என்று அனைத்து விதமான கதைகளிலும் நடித்து அசத்தினார் விஜய்.

ஹாலிவுட் படம் தந்த இன்ஸ்பிரேஷன்.. தமிழில் எடுத்து 23 வாரம் ஓடி மெகா ஹிட்டான MGRன் படம் - எந்த மூவி தெரியுமா?

Ilayathalapathy vijay

இளைய தளபதி 

விஜய் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பரம ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில் தான் கடந்த 1994ம் ஆண்டு அவருடைய நடிப்பில் வெளியான "ரசிகன்" என்கின்ற திரைப்படத்தில், முதல் முறையாக "இளைய தளபதி" என்கின்ற தலைப்புடன் அவருடத பெயர் டைட்டில் கார்டில் வெளியானது. பொதுவாக ஒரு ஹீரோவாக நடிக்க தொடங்கும் பொழுது, தன்னுடைய கதாபாத்திரம் அனைத்து விதத்திலும் வெற்றி பெறும் விதமாக உள்ள கதைகளை தான் தேர்ந்தெடுப்பார்கள் நடிகர்கள் . 

ஆனால் இளம் வயதிலேயே "பூவே உனக்காக" போன்ற திரைப்படத்தில் அனைத்தையும் விட்டுக் கொடுக்கும் ஹீரோவாக, "நேருக்கு நேர்" போன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று, கதையை மட்டுமே கவனத்தில் கொண்டு படங்களில் நடிக்க துவங்கினார் இளைய தளபதி விஜய். நடிப்பு, நடனம், பாடல் மற்றும் ஆக்ஷன் என்று அனைத்தும் சேர்ந்த ஒரு Perfect Hero Materialலாக வலம்வந்தார்.

Tap to resize

Thalapathy vijay

தளபதி விஜய்   

பல ஆண்டுகளாக இளைய தளபதியாக பயணித்து வந்த விஜய், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தளபதி என்ற செல்லப் பேருக்கு சொந்தக்காரர் ஆனார். உண்மையில் தளபதி என்ற பட்டம் அவருக்கு வந்த பிறகு தான், பெரிய அளவில் அவர் அரசியல் ரீதியான படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக கடந்த 2013ம் ஆண்டு வெளியான ஏ.எல் விஜயின் "தலைவா", 2017ம் ஆண்டு மூன்று வேடங்களில் விஜய் அசத்திய "மெர்சல்", அதைத் தொடர்ந்து வெளியான "சர்க்கார்" உள்ளிட்ட திரைப்படங்களில் பெரிய அளவில் தன்னுடைய அரசியல் முன்னெடுப்பு குறித்து பேசி இருந்தார் தளபதி விஜய். 

இந்த சூழலில் பலரும் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியானது. தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியினை மக்களுக்கு அறிவித்தார் விஜய். ஆனால் அவர் அந்த அறிவிப்போடு நிறுத்தியிருந்தால் கூட அவர் மேல் தனி மரியாதையை அவர் ரசிகர்களுக்கு வந்திருக்காது. ஆனால், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு பட பணிகளை முடித்துவிட்டு, சினிமாவில் இருந்தே விலகப்போகிறேன் என்று அறிவித்தது தான் விஜயின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. 

Thalapathy 69 movie

தளபதி 69

இந்த செப்டம்பர் மாத இறுதியில் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை தளபதி விஜய் நடத்த உள்ள நிலையில், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தனது 69 வது திரைப்பட பணிகளை அவர் துவங்குவார் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ள நிலையில் விரைவில் அந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளது. 

ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசனுக்கு எழுதிய ஒரு அரசியல் சார்ந்த கதையை தான், இப்போது விஜய்க்கு, வினோத் பயன்படுத்த உள்ளதாகவும் சில தகவல்கள் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கூறுகின்றன.

பாதி பாட்டு வெஸ்டர்ன்.. மீதி பாட்டு போக்.. ரஜினிக்காக புதிய முயற்சி - வாலியை அசர வைத்த இளையராஜா!

Latest Videos

click me!