தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், திரைத்துறையில் பல சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக "உலகம் சுற்றும் வாலிபன்" என்கின்ற திரைப்படத்திற்காக உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு ஷூட்டிங் எடுத்து, தமிழ் திரை உலகில் வெளியான முதல் வெளிநாட்டில் உருவான படம் என்கின்ற பெருமையை பெற்றார் எம்ஜிஆர்.
இந்த திரைப்படத்தில் ஒரு சுவாரசியமான சம்பவமும் உண்டு, முதலில் இந்த திரைப்படத்திற்கு, வாலி நான் அனைத்து பாடல்களையும் எழுதுவதாக இருந்தது. ஆனால் ஒரு நாள் வாலியை கலாய்க்க நினைத்த எம்.ஜி.ஆர், இந்த திரைப்படத்தில் நீங்கள் பாடல்கள் எழுதவில்லை. உங்களுக்கு பதிலாக வேறு ஒருவர் எழுதுகிறார் என்று சொல்லி அவரிடம் வம்பிழுத்துள்ளார். அப்போது ஜாலியாக பேசிய வாலி, என்னுடைய பாடல் இந்த திரைப்படத்தில் இல்லை என்றாலும், என் பெயர் இல்லாமல் இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.
வியந்து போன எம்ஜிஆர், எப்படி என்று கேட்க, உங்கள் படத்தின் பெயர் "உலகம் சுற்றும் வாலிபன்" தான், அதில் வாலியை எடுத்து விட்டால், "உலகம் சுற்றும் பன்" என்று பெயர் வைத்தா ரிலீஸ் செய்வீர்கள் என்று கேட்க, மகிழ்ச்சியாக அவரைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாராம் எம்ஜிஆர்.