தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் சொந்த குரலில் பேசி நடித்த வெகு சில நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். மொழியின் ஆளுமை, நடிப்பு திறமை, நடனம், சண்டை பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி என்று சினிமாவில் கமல்ஹாசனுக்கு தெரியாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, பல துறைகளில் மன்னனாக விளங்கி வரும் கமல்ஹாசனின் வலது கரமாக ஒரு பெண் செயல்பட்டு வந்தார். அவர்தான் பல திரைப்படங்களில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தவர்.