
நடிகை மீரா வாசுதேவன் தமிழில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான காவேரி என்கிற சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சூர்யவம்சம், பெண், சித்தி 2 போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்த இவர், ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.
கோலிவுட்டில் உன்னை சரணடைந்தேன் படத்தில் நடித்ததற்காக நடிகை மீரா வாசுதேவனுக்கு தமிழ்நாடு அரசின் விருதும் கிடைத்தது. இதுதவிர அடங்க மறு, ஜெர்ரி, ஆட்டநாயகன் போன்ற படங்களில் மீரா நடித்துள்ளார்.
நடிகை மீரா வாசுதேவனுக்கு கடந்த 2005-ம் ஆண்டு முதல் திருமணம் நடந்தது. அவர் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகனான விஷால் அகர்வாலை கரம்பிடித்தார். மீரா வாசுதேவன் - விஷால் அகர்வால் ஜோடியின் திருமண வாழ்க்கை 5 ஆண்டுகளில் முறிந்தது. கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு விஷால் அகர்வாலை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் மீரா வாசுதேவன்.
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து மீண்டும் சினிமாவில் நடித்துவந்த நடிகை மீரா வாசுதேவனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு பிரபல வில்லன் நடிகர் ஜான் கொகேன் உடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்புடன் பழகிய இவர்கள் இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறினர். பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2012-ம் ஆண்டு ஜான் கொகேனை திருமணம் செய்துகொண்டனர் மீரா.
இதையும் படியுங்கள்... ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பார்த்திபனின் "டீன்ஸ்".. இனி OTTயிலும் - லேட்டஸ்ட் அப்டேட்!
ஜான் கொகேன் - மீரா வாசுதேவன் ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மீரா வாசுதேவனின் இந்த திருமணமும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. ஜான் கொகேன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கடந்த 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார் மீரா.
மீரா வாசுதேவனை டைவர்ஸ் செய்த பின்னர் நடிகர் ஜான் கொகேன் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை பூஜா ராமச்சந்திரனை காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
ஜான் கொகேனை பிரிந்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வந்த நடிகை மீரா வாசுதேவன், சைலண்டாக மூன்றாவது திருமணத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்.
கடந்த மே மாதம் கோவையில் உள்ள மீரா வாசுதேவனின் இல்லத்தில் தான் அவரது மூன்றாவது திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். அவர் விபின் என்பவரை தான் 3வதாக திருமணம் செய்துகொண்டார். மீராவின் 3வது கணவர் விபின் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு தான் மீராவும் விபினும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். இணைந்து பணியாற்றி வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துவிட்டனர். நடிகைகள் ராதிகா, வனிதாவுக்கு அடுத்தபடியாக 3-வது திருமணம் செய்துகொண்ட நடிகை என்றால் அது மீரா வாசுதேவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சென்னையில் த்ரிஷா வீட்டை வாங்கியது யார் தெரியுமா? "அந்த" கிளாசிக் தமிழ் நடிகர் தானாம்!