பொன்னியின் செல்வன் விழா: வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த கமல்; உள்ளூரில் இருந்தும் ரஜினி கலந்துகொள்ளாதது ஏன்?

Published : Mar 29, 2023, 11:12 AM IST

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது ஏன் என்கிற தகவல் கசிந்துள்ளது.

PREV
16
பொன்னியின் செல்வன் விழா: வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த கமல்; உள்ளூரில் இருந்தும் ரஜினி கலந்துகொள்ளாதது ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்து, 2022-ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்து இருந்தது.

26

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்து, 2022-ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்து இருந்தது.

36

பொன்னியின் செல்வன் முதல்பாகத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... நானா திருடல... என்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான்...! போலீஸிடம் பகீர் தகவலை வெளியிட்ட ஈஸ்வரி

46

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் இருவருமே சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களின் பங்கேற்பு அந்த விழாவை வேறலெவலில் எடுத்து சென்றது. அதேபோல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினி கமல் இருவருமே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல் மட்டுமே கலந்துகொள்வர் என்கிற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

56

அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்காக இன்று இத்தாலியில் இருந்து சென்னைக்கும் பறந்து வந்திருக்கிறார். அதேவேளையில், சென்னையில் இருக்கும் ரஜினி இசை வெளியீட்டு விழாவுக்கு வர மறுத்தது ஏன் என்கிற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். ஏனெனில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹைலைட்டாக இருந்ததே ரஜினிகாந்தின் ஸ்பீச் தான். அப்படி இருக்கையில் அவர் ஏன் இன்று கலந்துகொள்ள மறுத்துவிட்டார் என கேட்டு வருகின்றனர்.

66

ஆனால் உண்மையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்திற்கும் லைகா நிறுவனம் அழைப்பு விடுத்திருந்ததாம். ஆனால் அவர் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால், கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாம். இதையடுத்து தான் கமலை வைத்து மட்டும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி முடிக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... பத்து தல படத்துக்கு அனுமதி தர மறுத்த தமிழக அரசு... அரசின் முடிவால் கடும் அப்செட்டில் சிம்பு ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories