உடல் எடையை குறைத்த பின் நடிகர் சிம்பு நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இந்த இரு படங்களின் வெற்றிக்கு பின்னர் அவர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நடிகர் சிம்புவுக்கு ஜோடி இல்லை. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.