அதன்படி, ஐஸ்வர்யா வீட்டில் தான் மாடு மாதிரி உழைத்ததாகவும், ஆனால் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை அவர் தர வில்லை என கூறி இருக்கிறார் ஈஸ்வரி. பின்னர் எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என போலீஸ் கேட்டதற்கு மாதம் 30 ஆயிரம் தான் கொடுத்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஈஸ்வரி. அந்த பணம் போதுமானதாக இல்லை என்பதால் தான் சின்ன சின்ன திருட்டுகளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் ஈஸ்வரி.
அந்த திருட்டுகளை ஐஸ்வர்யா கண்டுபிடிக்காததால், பின்னர் நகைகளை திருட தொடங்கியதாகவும், அதை வைத்து தான் வீடு வாங்கியதாகவும் கூறிய ஈஸ்வரி, இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் நிறைய திருடி இருப்பேன் எனவும் கூறி இருக்கிறார். நிறைய சம்பளம் கொடுத்திருந்தால் நான் ஏன் திருட போகிறேன். இது தான் தன்னை திருட தூண்டியதாகவும் போலீஸ் விசாரணையில் ஈஸ்வரி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய் டிவிக்கு டாடா காட்டிவிட்டு வேறு சேனலுக்கு தாவிய மிர்ச்சி செந்தில்... அவர் நடிக்கும் புது சீரியல் அப்டேட்