
சாண்டல்வுட் நடிகர் கிச்சா சுதீப்புக்கு , 2019ஆம் ஆண்டுக்கான கர்நாடக மாநில அரசின் பைல்வான் படத்துக்காக அறிவிக்கப்பட்டது. அதை அவர் மறுத்துள்ள நிலையில்... அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கிச்சா சுதீப், கர்நாடக மாநில அரசின் விருதை மறுக்க ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் சில வருடங்களுக்கு முன்பு இதே மாநில அரசின் விருத்தால் கிச்சா சுதீப் சில அவமானங்களை சந்துள்ளார். அதை மனதில் வைத்தே தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் விருதை கிச்சா சுதீப் மருத்துள்ளதாக கூறப்படுகிறது.
'குடும்பஸ்தனாக' ரசிகர்கள் மனதை கவர்ந்தாரா மணிகண்டன்? முதன் நாள் வசூல் விவரம் இதோ!
கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திருப்பிடம் தான் ‘ரங்கா எஸ்.எஸ்.எல்.சி (Ranga SSLC)’ இந்த படத்திற்கும் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘முசஞ்ச மாது (Mussanje Mathu)’ படத்திற்கும் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டதாம். விருதுக் குழுவே போன் பண்ணி இந்த தகவலை சொல்லியிருக்காங்க. ஆனா, கர்நாடக மாநில விருது அறிவிக்கப்பட்டப்போ, வேற நடிகருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதாம். சினிமா விருதுலயும் நடந்த அரசியல் & பாரபட்சத்தால நொந்துபோன சுதீப், அதுக்கப்புறம் விருதுகள், விருது விழாக்கள், கௌரவ டாக்டர் பட்டம்னு எல்லாத்தையும் தொடர்ந்து புறக்கணிக்க துவங்கினார்.
ஆனா, இத பத்தி அவர் ஸ்டேட்மென்ட் மற்றும் எங்கயுமே நேரா சொல்லல இப்போ 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான மாநில விருதை இப்போ மருத்துருக்காரு, இது குறித்து அவர் கூறியிருக்குறதாவது. ‘எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைச்சது ரொம்ப பெருமையான விஷயம்தான். இந்த மரியாதையைக் கொடுத்ததுக்கு நடுவர்களுக்கும், அரசுக்கும் நன்றி சொல்றேன். ஆனா, நான் ரொம்ப வருஷமா விருதுகளை வாங்கறத நிறுத்திட்டேன். என்னோட சொந்த காரணங்களால இந்த முடிவை எடுத்திருக்கேன். நடிப்புல தங்களை ஈடுபடுத்திக்கிட்ட நிறைய கலைஞர்கள் இருக்காங்க. இந்த மரியாதையை நான் மதிக்கிறேன். ஆனா, நான் இந்த விருதை வாங்கறதை விட, எனக்குத் தகுதியான ஒருத்தர் வாங்கறதப் பாக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்’னு கிச்சா சுதீப் சமூக வலைத்தளத்துல சொல்லி இருக்காரு.
திருமணம் எப்போன்னு கேட்டது குத்தமா? சரவெடியாய் பொரிந்து தள்ளிய ஸ்ருதி ஹாசன்!
அதே போல தொடர்ந்து, ‘சினிமா ரசிகர்களை மகிழ்விக்கிறதுதான் என் வேலை. இத்தன வருஷமா எந்த விருதுக்காகவும் எதிர்பார்க்காம இந்த வேலையைச் செஞ்சுட்டு இருக்கேன். நடுவர்களோட இந்த முடிவு வரவேற்கத்தக்கது, இது என்னை இன்னும் சினிமாவுல ஈடுபடவும், வேலை செய்யவும், முன்னேறவும் உத்வேகம் கொடுக்கும்.
2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததுக்கு எல்லா நடுவர்களுக்கும் நன்றி சொல்றேன். என் முடிவால் நடுவர்களுக்கும், மாநில அரசுக்கும் வருத்தம்னா, மனசார மன்னிப்பு கேக்குறேன். ஆனா, நீங்க என் முடிவை மதிப்பீங்க, என் விருப்பத்துல நான் போறதை ஆதரிப்பீங்கன்னு நம்புறேன். என் வேலையைப் பாராட்டி இந்த விருதைக் கொடுக்க முடிவு பண்ணவங்களுக்கும், மாநில அரசுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்’னு கிச்சா சுதீப் கூறியுள்ளார். ‘பைல்வான்’ படத்தை ‘கிருஷ்ணா’ இயக்கி இருந்தும். இந்த படத்திற்காக, தன்னுடைய உடலை 6 பேக் உடல் கட்டுக்கு மாற்றி கிச்சா சுதீப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரோட்டா சாப்பிடும் கேப்பில் வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?