அதிக அளவில் கும்பல் கூட வில்லை என்றாலும், குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே அங்கு இருந்ததால், அஜித் அனைத்து ரசிகர்களுடனும் சிரித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதில் குறிப்பிட்ட கூற வேண்டியது என்னவென்றால், ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் பெரும் தல அஜித் ஏன்? வாடகை காரில் வந்தார் என்பது தான்.
10 படம் நடித்து விட்டாலே, விதவிதமான சொகுசு கார்களை வாங்கி 10 ஜிம் பாய்ஸ்களுடன் வந்து இறங்கும் நடிகர்கள் மத்தியில், துளியும் அலட்டி கொள்ளாமல், மிகவும் சாதாரணமாக அஜித் வாடகை காரில் வந்தது பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
பொது இடங்களில் தன்னுடைய பகட்டை காட்ட விரும்பாத அஜித், சாதாரண காரை வாடகைக்கு எடுத்து வந்துள்ளார்.
ரீபில் கிளப் செல்ல வழி தெரியாத போது கூட அவரே கீழே இறங்கி, குறிப்பாக ஒரு உதவியாளர் கூட இல்லாமல் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்த காவலாளிகளிடம் விசாரித்த போது தான், அந்த வாடகை காரில் வந்தது அஜித் என்றே பலருக்கும் தெரிய வந்தது.
ரசிகர்கள் தன்னை நோக்கி வரும் போது கூட, அவர்களை சிரித்தபடி வரவேற்று, சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டு செம்ம தில்லாக பழைய கமிஷ்னர் அலுவலகம் நோக்கி சென்றுள்ளார் தல.