லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
முதல் மூன்று நாட்களிலேயே வசூலில் தட்டித்தூக்கிய மாஸ்டர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது.
சமீபத்திய தகவலின் படி “மாஸ்டர்” திரைப்படம் தான் உலக அளவில் முதலிடத்தில் கலெக்ஷன் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஹாலிவுட் படங்களை வசூலில் மாஸ்டர் திரைப்படம் பின்னுக்குத் தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் விஜய்க்கு தரமான வில்லனாக நடித்து... தளபதி ரசிகர்களையே அதிகம் கவர்ந்தவர் என்றால் அது விஜய் சேதுபதி தான். விஜய் வரும் காட்சிகளை போல், விஜய் சேதுபதி வரும் காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
எனவே... இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் தளபதி மற்றும் மக்கள் செல்வன் ரசிகர்கள் இணைந்து, பவானி கதாபாத்திரத்திற்கு என ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், முரட்டு வில்லன் பவானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டிய பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் முதலில், பாலா படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்.கே.சுரேஷை தான் இந்த கதாபாத்திரத்திற்கு அணுகப்பட்டதாகவும்.. ஒரு சில காரணங்களால் அவர் நடக்கதாதல் மக்கள் செல்வன் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.