இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடைசி பட டிரைலரை வெளியிட்ட 5 மாத மகன்!

Published : Feb 19, 2021, 05:13 PM IST

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின், கடைசி படமான 'ராஜமார்த்தாண்டன்' படத்தின் ட்ரெய்லரை அவரது மகன் ஜூனியர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
16
இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடைசி பட டிரைலரை வெளியிட்ட 5 மாத மகன்!

இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில், சிரஞ்சீவி சர்ஜா கடைசியாக நடித்து முடித்திருந்த திரைப்படம் 'ராஜமார்த்தாண்டன்'. இந்த படத்தின் ட்ரைலரை, அவரது 5 மாத மகனே வெளியிட்டுள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. சுமார் பத்து வருடங்களாக நடிகை மேக்னா ராஜ் காதலித்த இவர், பெற்றோர் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.

26

திருமணம் ஆன இரண்டு வருடத்திலேயே...  சிரஞ்சீவி சர்ஜா, கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும் கலங்க செய்தது. இவர் இறக்கும் போது, சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பமாக இருந்தார்.

36

கடந்த ஆண்டு இவருக்கு, அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. காதலர் தினம் அன்று, முதல் முறையாக தன்னுடைய 5 மாத மகன் புகைப்படத்தை வெளியிட்டார் மேக்னா ரசிகர்கள் பலரும் அச்சு அசல், சிரஞ்சீவி சர்ஜா போலவே இருப்பதாக கூறினார்.

46

இதையடுத்து தற்போது ஜூனியர் சிரஞ்சீவி சர்ஜா தான், தன்னுடைய தந்தையின் கடைசி படத்தின் ட்ரைலரில், அம்மா மடியில் அமர்ந்தபடி சமத்தாக வெளியிட்டுள்ளார்.  இரண்டு நிமிட ட்ரைலராக வெளியாகியுள்ள ராஜமார்த்தாண்ட படம் ஒரு ஆக்சன் படமாக உருவாகி உள்ளது என்பதை, ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.  மேலும் காதல் காமெடி ரொமான்ஸ் என அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

56

லாக் டவுன் பிரச்சனைக்கு முன்னதாகவே இந்த படத்தின்  படப்பிடிப்பு முழுவதும்  முடிந்த நிலையில் போஸ்ட் படத்தின் பணிகள் மட்டும் தாமதமாகி வந்தது. இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி சர்ஜாவிற்கு யார் டப்பிங் செய்வார் என்பது மிகப்பெரிய கேள்வி ஆக இருந்த நிலையில், இதனை தான் செய்து தருவதாக ஒப்புக்கொண்டார் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் துருவா சர்ஜா.

66

தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதே நேரத்தில் இன்று துருவா சர்ஜா நடித்துள்ள 'செம திமிரு' திரைப்படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories