தனுஷ் இல்லையாம்; குட் பேட் அக்லியில் அடுத்த பட இயக்குனரை சூசகமாக அறிவித்த ஏகே!

Published : Apr 11, 2025, 11:25 AM IST

குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
தனுஷ் இல்லையாம்; குட் பேட் அக்லியில் அடுத்த பட இயக்குனரை சூசகமாக அறிவித்த ஏகே!

Ajithkumar next Movie AK64 Director : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு அஜித் ரசிகர்களை குஷியாக்க அவரின் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று விடாமுயற்சி. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 6ந் தேதி தான் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த விடாமுயற்சி திரைப்படம், அவர்களை இம்பிரஸ் செய்ய தவறியது.

24
Ajithkumar

ஆதிக்கின் ஃபேன் பாய் சம்பவம்

விடாமுயற்சி பிளாப் ஆனதால் அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கும் விதமாக அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். சுமார் 280 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஒரிஜினல் ஃபேன் பாய் சம்பவமாக கொடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்கியதா? பட்டைய கிளப்பியதா? வசூல் நிலவரம் இதோ

34
Ajith Next Movie

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்?

வழக்கமாக தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் முன்னரே அடுத்த பட இயக்குனரை இறுதி செய்துவிடுவார் அஜித். ஆனால் குட் பேட் அக்லி படத்துக்கு பின் அஜித் நடிக்க உள்ள ஏகே 64 திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. அண்மையில் தனுஷ், அஜித்துக்கு கதை சொன்னதாக தகவல் வெளியானது. இதனால் ஏகே 64 படத்தை தனுஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஒரு புது ட்விஸ்ட் கொடுத்துள்ளார் அஜித். அதன்படி அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கப்போவதில்லையாம்.

44
AK 64 Director

ஏகே 64 இயக்குனர் இவர்தானா?

தன்னுடைய ஏகே 64 படத்தை இயக்கப்போகும் இயக்குனர் குறித்து குட் பேட் அக்லி படத்திலேயே அஜித் ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கிறார். அதை எத்தனைபேர் நோட் பண்ணினார்கள் என்பது தெரியவில்லை. குட் பேட் அக்லி பட கிளைமாக்ஸில் அஜித் ஒரு பிரம்மாண்ட காரில் வந்து இறங்குவார். அவர் வந்த காரின் நம்பர் பிளேட்டில் “DIR AK 64 2026" என குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்மூலம் ஏகே 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என்பதையும், இப்படத்தை 2026ம் ஆண்டு வெளியிட உள்ளதையும் அஜித் சூசகமாக அறிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  குட் பேட் அக்லியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்; ஆனா அஜித் ரியாக்‌ஷன் என்ன?

Read more Photos on
click me!

Recommended Stories