ஜெமினி மட்டும் அல்ல; சாவித்ரியின் வாழ்க்கையை சீரழித்த அரசியல்வாதி யார்?

First Published | Nov 6, 2024, 6:49 PM IST

நடிகையர் திலகம் என பெயர் எடுத்த, சாவித்ரியின் வாழ்க்கை தலைகீழாக மாற காரணம் அவரது கணவர் ஜெமினி கணேசன் தான் என சிலர் கூறி வந்தாலும், அவரது வாழ்க்கையை சீரழித்ததில் பிரபல  அரசியல்வாதியின் பங்கும் உள்ளது என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Savitri

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், 1950-80 இடைப்பட்ட காலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து ஆட்சி செய்தவர் மகாநடி சாவித்திரி. காதல், எமோஷன், அழுகை, அன்பு, ஆனந்தம் என நாவரசங்களையும் தன்னுடைய முக பாவனையில் வெளிப்படுத்தி சிறந்த  நடிகை என பெயர் எடுத்தவர்.

லெஜெண்ட்டரி நடிகையான சாவித்ரி இன்று இல்லை என்றாலும், அவரை பற்றிய செய்திகள் வெளியானால் அது அதிகப்படியான ரசிகர்களால் படிக்கப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு நிமிடமும் அவரைப் பற்றிய விவாதங்கள் எங்கோ நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. 

Savitri is Lady Super Star

தன்னுடைய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வரும் சாவித்ரி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து தன்னுடைய திறமையால் சினிமா வாய்ப்புகளை கைப்பற்றி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர்.  

தன்னுடைய அற்புதமான நடிப்பு திறமையால், அனைவரையும் கவர்ந்த சாவித்திரி, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எஸ்.வி.ஆர் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர். சாவித்திரியுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதற்காக, பல முன்னணி நடிகர்கள் காத்திருந்த காலங்களும் உண்டு. 

உடன்பிறப்புகளோடு அஜித் மனைவி ஷாலினி கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் புகைப்படம்!

Latest Videos


Savitri and Gemini Ganesan Separation

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்திரி, ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவராலேயே மீளமுடியாத துயரத்திற்கு ஆளானார். 

சாவித்ரியின் வாழ்க்கை சீரழிந்ததற்கு முக்கிய காரணம் ஜெமினி கணேசன் தான் என்கிற தகவல்கள் ஒருபுறம் இருந்தாலும், சாவித்திரி தன்னுடைய வாழ்க்கையில் வீழ்ச்சியை சந்திக்க ஜெமினி மட்டுமே காரணமல்ல.  வேறொரு நபரும் இதற்கு காரணம் என்கிற அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியே வந்துள்ளது. 

Politician Revenge

அதாவது ஒரு அரசியல்வாதி தான் சாவித்ரியின் வாழ்க்கை வீழ்ச்சியை சந்தித்ததற்கான காரணம் என சாவித்ரியிடம் பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் இமாந்தி ராமாராவ் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அவர் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், "சாவித்ரியுடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. ஜெமினி கணேசன் சாவித்ரியை மூன்றாவது மனைவியாக மணந்தார்.  அப்போது அவருக்கு அலமேலு மற்றும், புஷ்பவல்லி என இரண்டு மனைவிகள் இருந்தனர். ஆனால், இது சாவித்ரிக்கு ஆரம்பத்தில் தெரியாது. பின்னர் தெரிந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சாவித்ரியின் வாழ்க்கை சீர்குலைய ஜெமினி கணேசன் மட்டும் காரணம் அல்ல, மற்றொரு அரசியல்வாதி கூட காரணம். 

பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல பாடகி புற்றுநோயால் காலமானார்!

Gemini Ganesan Not Caring Savitri

ஜெமினி கணேசனுடனான சண்டைக்குப் பிறகு சாவித்ரி தனியாகவே வாழ்ந்தார். அவருக்கு நிறைய சொத்துகள் இருந்ததால் ராணி போல் வாழ்ந்தார். அப்போதுதான் ஒரு அரசியல்வாதி அவர் மீது கண் வைத்தார். அவரை வசப்படுத்திக்கொள்ள முயன்றார். ஆனால், சாவித்ரி அதற்க்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அந்த அரசியல்வாதி சாவித்ரியை பழி வாங்கும் நோக்கில், வருமான வரித்துறை சோதனை நடத்த வைத்தார் என்று சீனியர் பத்திரிகையாளர் ராமாராவ் தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் சாவித்ரிக்கு ஆதரவாக யாரும் இல்லை. ஜெமினி கணேசன் இதையெல்லாம்  கண்டுக்கொள்ளவில்லை. இதனால் சாவித்ரி தனிமையில் ஆழ்ந்தார். வருமான வரித்துறை சோதனையில் அவரது மொத்த சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அவர் வீதியில் இறங்க நேர்ந்தது. தனது சொத்துகள் எங்கே இருக்கின்றன என்று கூட அவருக்கு தெரியாமல் போனது. எத்தனை பேருக்கு பணம் கொடுத்தார் என்றும் அவருக்கு தெரியவில்லை. 

Journalist Ramaroa interview

அவரை சுற்றி இருந்தவர்கள் கூட சாவித்திரியை ஏமாற்றினர். கணவரின் மோசடி, அரசியல்வாதியின் பழிவாங்கல், சுற்றி இருந்தவர்களின் நயவஞ்சக புத்தியால், தன்னுடன் யாரும் இல்லாதது போல் உணர்ந்தார். ஒரு கட்டத்தில் சாவித்ரி மன அழுத்தத்தில் ஆழ்ந்தார். மதுவுக்கு அடிமையானார். பின்னர் மருத்துவமனையில் கோமாவுக்குப் போய் சில காலம் கழித்து இறந்தார். மிகவும் பரிதாபகரமான நிலையில் அவர் இறந்தார் என்று பத்திரிகையாளர் ராமராவ் தெரிவித்தார். அண்மையில் பிரபல யூடியூப்பில் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர் இந்த தகவலை வெளியிட்ட பின்னர், அந்த அரசியல்வாதி யார் என்கிற ஆர்வம் எழுந்துள்ளது. அந்த அரசியல்வாதியின் பெயரை குறிப்பிடாமல், அதிகாரத்தில் இருந்த ஒரு பெரிய அரசியல் தலைவர் இதையெல்லாம் செய்தார் என்று அவர் கூறியுள்ளார். அந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர், மாற்றும் கருணாநிதி ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர்.என்பதால்...  இவர்களில் யாராவது ஒருவரா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள்.

கண்டுகொள்ளாத விஜய்; அஜித் மனைவி செய்த உதவி? திடீர் என நடந்த ஷாலினி - சங்கீதா சந்திப்பின் பின்னணி என்ன?

click me!