Kanguva
பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் கங்குவா. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா உழைத்து இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. முதல் முறையாக பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா உடன் சூர்யா இணைந்திருக்கும் திரைப்படம் தான் இது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் வெளியாகின்றது. தமிழில் நடிகர் சூர்யாவின் குரலை AI மூலம் 38 மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இது இப்படத்தின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
பாலிவுட்டில் ஹீரோயினாக நடித்து அசத்திய ஒரே கோலிவுட் நகைச்சுவை நடிகை - யார் அவங்க தெரியுமா?
Kanguva Movie
இந்த திரைப்படம் நிச்சயம் உலக அளவில் சுமார் 2000 கோடி ரூபாய் வரை வசூல் செய்து தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் என்று துவக்கத்தில் இருந்தே இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கை தெரிவித்து வருகின்றார். முதல் நாளிலேயே கங்குவா திரைப்படம் 100 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்து மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறும் என்றும் அண்மையில் அவர் கூறியிருந்தார். இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் சிரமங்களை மேற்கொண்டு நடித்திருக்கிறார் என்றும், இந்த திரைப்படம் மொத்தம் 2.26 மணிநேரம் ஓட உள்ள நிலையில். அதில் இரண்டு மணி நேரம் ஹிஸ்டாரிக்கல் சப்ஜெக்டும், 26 நிமிடங்கள் தற்கால சப்ஜெக்ட்டும் இருக்கும் என்று ஞானவேல் அவர்களே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
Disha
இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் இருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா மிகப் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்படும் என்றும், உலக அளவில் உள்ள விநியோகஸ்தர்களை அழைத்து அந்த வெற்றி விழா நிச்சயம் நடக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றார். நடிகர் சூர்யா ஹைதராபாத், கேரளா, மும்பை என்று பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக சிரத்தை எடுத்து பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Gnanavel Raja
கங்குவா திரைப்பட பணிகள் முடிந்த உடனேயே லோகேஷ் கனகராஜன் ரோலக்ஸ், வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் பாலிவுட் இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள கர்ணா உள்ளிட்ட திரைப்படங்களில் சூர்யா நடிக்க உள்ள நிலையில், கங்குவா திரைப்படம் வெளியான பிறகு சூர்யா இப்போது நடித்து வரும் கார்த்திக் சுப்புராஜின் படம் வெளியாகும் என்றும். அதை தொடர்ந்து பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் 45வது படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சினிமாவை விட்டு விலகி 23 வருஷம் ஆகியும் கோடீஸ்வரியாக வாழும்; இந்த ஜீரோ பிளாப் நடிகை யாருன்னு தெரியுதா?