உடன்பிறப்புகளோடு அஜித் மனைவி ஷாலினி கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் புகைப்படம்!

First Published | Nov 6, 2024, 4:47 PM IST

அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தன்னுடைய அண்ணன் ரிச்சர்ட் மற்றும் தங்கை ஷாமிலியோடு தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Shalini Diwali Celebration

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஷாலினி, தன்னுடைய நான்கு வயதிலேயே மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். பின்னர் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிஸியான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாலினி தென்னிந்திய திரை உலகில் சூப்பர் டாப் நடிகர்களாக இருக்கும்,  பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
 

Shalini Celebrate Diwali with Brother and Sister

ஷாலினி போலவே அவருடைய அண்ணன் ரிச்சர்ட் மற்றும் தங்கை ஷாமிலியும் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர். ஷாலினி தன்னுடைய 21 வயதிலேயே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவரது உடன் பிறப்புகளான ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி இருவரும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர்.

சினிமாவை விட்டு விலகி 23 வருஷம் ஆகியும் கோடீஸ்வரியாக வாழும்; இந்த ஜீரோ பிளாப் நடிகை யாருன்னு தெரியுதா?
 

Tap to resize

Richard Rishi Movies

ரிச்சர்ட் தமிழில் ஹீரோவாக அறிமுகமான காதல் வைரஸ் திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில்,  இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்களுக்கும் அடுத்தடுத்து தோல்வி படங்களாக அமைத்தன. ஹீரோவாக நிலைத்து நிற்க முடியாமல் போனாலும், தன்னுடைய முயற்சியை கை விடாத ரிச்சார் திரையுலகில் தொடர்ந்து போராடி வந்தார்.
 

Richard Tamil movies

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் இவர் நடித்த திரௌபதி என்கிற இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடித்த பரமபத விளையாட்டு, ருத்ர தாண்டவம், போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களுடன் சுமாரான வெற்றி பெற்றது. தமிழில் அடுத்ததாக இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கண்டுகொள்ளாத விஜய்; அஜித் மனைவி செய்த உதவி? திடீர் என நடந்த ஷாலினி - சங்கீதா சந்திப்பின் பின்னணி என்ன?

Shamlee

ஷாலினியின் தங்கை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக நடித்த அஞ்சலி திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியவர் என்றாலும், இவர் ஹீரோயினாக நடித்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும் நடிப்பில் பெரிதாக இவருக்கு ஆர்வம் இல்லாததால், மாடர்ன் ஆர்ட் வரைவதில் கவனம் செலுத்தி வருகிறார். தான் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்ய ஆர்ட் கேலரி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
 

Diwali Celebration Photos

இந்நிலையில் ஷாலினி தன்னுடைய அண்ணன் மற்றும் தங்கை ஷாலினியுடன் இணைந்து, இந்த ஆண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஷாலினி மிகவும் எளிமையாக வெள்ளை நிற சேலையில், ப்ரீ ஹேர் ஸ்டைலில் ஜொலிக்கிறார். ஷாமிலி ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சிவப்பு நிற சேலை கட்டி உள்ளார். ரிச்சர்ட் மிகவும் ஸ்டைலிஷாக தன்னுடைய இரு சகோதரிகள் தோல் மேல் கை போட்டபடி போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலகிருஷ்ணா முன் சூர்யா மானத்தை வாங்கிய கார்த்தி; ஜோதிகா பற்றிய சீக்ரெட்டை தம்பியிடம் சொல்வாரா?

Latest Videos

click me!