அமரன் இல்ல; தீபாவளி ரிலீஸில் வேற வெவல் படம் இதுதான் - பாராட்டி தள்ளிய தனுஷ்

Published : Nov 06, 2024, 02:40 PM ISTUpdated : Nov 06, 2024, 02:47 PM IST

அமரன் படத்தை பாராட்டாத நடிகர் தனுஷ், அதற்கு போட்டியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் ஒன்றை பார்த்து வேறலெவலில் இருப்பதாக பாராட்டி உள்ளார்.

PREV
14
அமரன் இல்ல; தீபாவளி ரிலீஸில் வேற வெவல் படம் இதுதான் - பாராட்டி தள்ளிய தனுஷ்
Dhanush, SIvakarthikeyan

தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதை போல் திரைப்பிரபலங்களும் அப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அமரன் படத்தை முதல் ஆளாக பார்த்து பாராட்டி இருந்தார். இதையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அமரன் படத்தை பார்த்து முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டினார்.

24
Suriya watched amaran movie

இதையடுத்து நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோர் அமரன் படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்தினர். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்ததும் நடிகர் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து பாராட்டி இருந்தார். பின்னர் நடிகர் சிம்பு, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் படத்தை பார்த்து எக்ஸ் தள பக்கத்தில் படத்தை பற்றி சிலாகித்து பதிவிட்டு இருந்தனர்.

இதையும் படியுங்கள்... அடங்காத அசுரன் தனுஷின் ராயன் பட லைஃப் டைம் வசூலை 6 நாட்களில் அடிச்சு தூக்கிய அமரன்!

34
Lucky Baskhar

இந்த நிலையில், சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ், அமரன் படத்தை பார்க்கும் முன்னரே அதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார். அது வேறெதுவுமில்லை, துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த லக்கி பாஸ்கர் படத்தை தான் தனுஷ் பாராட்டி இருக்கிறார். படத்தை பார்த்ததும் அப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு போன் பண்ணியுள்ள தனுஷ், வேற லெவல் படம் என பாராட்டி தள்ளி இருக்கிறார். 

44
Dhanush, Venky Atluri, GV Prakash

இந்த தகவலை இயக்குனர் வெங்கி அட்லூரி சமீபத்திய நேர்காணலில் கூறி இருக்கிறார். நடிகர் தனுஷ் லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டி பதிவிட்டதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறாது. லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் வாத்தி என்கிற படத்தில் நடித்திருந்தார். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் போது வெங்கி அட்லூரி உடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரது படத்தை பாராட்டி இருக்கிறார். மறுபுறம் தனுஷின் அடுத்த படத்தை இயக்க உள்ளது அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான். அப்படி இருக்கையில் அவரின் அமரன் படத்தை பார்த்து தனுஷ் பாராட்டாமல் இருப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நிரம்பி வழியும் தனுஷின் கஜானா; ஆத்தாடி அவர் கைவசம் இத்தனை படங்களா?

Read more Photos on
click me!

Recommended Stories