பிரதர் படமே காத்துவாங்குது; அதுக்குள்ள ஜெயம் ரவியின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு!

Published : Nov 06, 2024, 01:17 PM IST

ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன நிலையில், தற்போது அவர் நடித்த மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதி இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
பிரதர் படமே காத்துவாங்குது; அதுக்குள்ள ஜெயம் ரவியின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு!
Jayam Ravi

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. கொரோனாவுக்கு பின் இவர் சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்கிற மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தன. ஆனால் அது எதுவுமே அவருக்கு வெற்றியை தேடித் தரவில்லை.

24
Brother Movie

கடந்த ஆண்டு அவர் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதையடுத்து இந்த ஆண்டு சைரன் படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. அப்படமும் அவருக்கு வெற்றியை தேடித் தரவில்லை. அதன்பின்னர் பிரதர் என்கிற பேமிலி செண்டிமெண்ட் படத்தில் நடித்தார் ஜெயம் ரவி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் நட்டி நட்ராஜ், சீதா, சரண்யா பொன்வண்ணன், பூமிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

இதையும் படியுங்கள்... ஆர்த்தி உடனான விவாகரத்து; என்னால் ஒருபோதும் இதை செய்ய முடியாது! ஜெயம் ரவி பளீச்!

34
Brother Movie Crew

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் தான் பிரதர் படத்தையும் இயக்கி இருந்தார். அக்கா - தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்தது. பேமிலி ஆடியன்ஸை நம்பி வெளிவந்த இப்படம் சொதப்பலான திரைக்கதையால் ரசிகர்களை கவர தவறியது. இதனால் தீபாவளி ரேஸில் அமரனிடம் படுதோல்வியை சந்தித்தது பிரதர் படம்.

44
Kadhalikka Neramillai Movie Release Date

பிரதர் படம் தியேட்டர்களில் காத்துவாங்கும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது கசிந்துள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 படமும் அந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கு போட்டியாக ஜெயம் ரவி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் மூலமாவது கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆர்த்தியால் சென்னைக்கு குட் பை சொல்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் நடக்கும் தடபுடலான ஏற்பாடு - Viral Video!

Read more Photos on
click me!

Recommended Stories