தளபதி விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை இதன் உண்மை நிலவரம் என்ன? என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது. விஜய் உடனான பிரச்சனை காரணமாக தான், சங்கீதா சென்னை பக்கம் வருவதே இல்லை என கூறப்பட்ட நிலையில், கடந்த மாதம் காலமான முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்த, கோபாலபுரம் வந்திருந்தார் சங்கீதா. இதை பார்த்த தளபதி ரசிகர்கள், சங்கீதா தளபதியுடன் சென்னையில் தான் வசித்து வருவதாக கூறி விவாகரத்து குறித்த தகவல் முற்றிலும் வதந்தி என கூறினர்.
25
Vijay and Sangeetha Divorce Issue
ஆனால், விஜய் கடந்த இரண்டு வருடமாகவே... மனைவி சங்கீதாவுடன் எந்த ஒரு நிகழ்வுகளிலும் ஒன்றாக காணப்படாததால், இருவருக்குள்ளும் பனிப்போர் நிலவி வருவதாகவே பார்க்கப்படுகிறது.
நடிப்பை தாண்டி தவெக என்கிற கட்சியை தொடங்கி, அரசியலில் முழு ஈடுபாடுடன் இறங்கி உள்ள தளபதி, அடுத்ததாக நடிக்க உள்ள தன்னுடைய 69-ஆவது படம் தான் கடைசி படம் என்பதை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். அதே போல் , கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் தன்னுடைய முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவில் தன்னுடைய இரண்டாவது மாநாட்டுக்கான பணியில் மும்முரமாக இறங்கி உள்ள விஜய்... குடும்பத்தை விட, அரசியல் பணிகளில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக தன்னுடைய மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்க உள்ள தகவல் கூட, அது பற்றிய அறிவிப்பு வந்த பிறகு தான் விஜய்க்கே தெரிய வந்ததாக செய்திகள் வெளியானது.
தன்னுடைய மகன் சினிமா துறையில் ஆர்வம் காட்டி வந்தாலும், விஜய் அதை பற்றி துளியும் கண்டுகொள்வது இல்லையாம். அம்மா சங்கீதா தான், மகனின் ஆசையை பூர்த்தி செய்ய பாடுபட்டு வருகிறார். இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஆசையை புரிந்து கொண்டு... ஓடி வந்து ஷாலினி தன்னுடைய பங்கிற்கு உதவி செய்துள்ளார் அஜித்தின் மனைவியும் சங்கீதாவின் தோழியான ஷாலினி அஜித்.
45
Jason Sanjay First Movie
அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான் தற்போது ஜேசன் சஞ்சயின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். அதே போல் ஷாலினியின் பரிந்துரையின் பெயரில் தான் லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து படு பிசியாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் ஷாலினியின் சிபாரி காரணமாக தான் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சஞ்சய்க்கு செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருகிறாராம். ஷாலினி - சங்கீதா இடையே பல வருடங்களாக இருந்து வரும் நட்பின் காரணமாக ஷாலினி இந்த உதவிகளை செய்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திடீரென சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. நட்பு ரீதியான இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசி கொண்டார்கள் என்பது தெரியவர வில்லை என்றாலும், இவர்களின் நட்பு அஜித் - விஜய் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.