பிரபல பாடகி சர்தா சின்ஹா, நவம்பர் 5 ஆம் தேதி (நேற்று) டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த ஏராளமான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பழம்பெரும் பாடகியான சர்தா சின்ஹா போஜ்புரி நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆவர். 72 வயதாகும் சின்ஹாவிற்கு, கடந்த 2018 முதல் 'மல்டிபிள் மைலோமா' என்ற ஒரு வகை இரத்தப் புற்றுநோயால் போராடி வந்தார். இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதிலும், நேற்று டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
25
Sharda Sinha suffered Cancer
தனது தாயாரின் மறைவு குறித்து, செய்தியாளர்களிடம் கூறிய அவரது மகன் அன்ஷுமான் சின்ஹா, “இது எங்களுக்கு ஒரு சோகமான தருணம். அவர் தான் உங்களின் உலகம் போல் இருந்தார். அவரது பாடலை விரும்பும் பலருக்கு இவரில் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தான். என்னைப் போலவே என் அம்மாவின் ரசிகர்களும் சோகமாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என கண்ணீர் மல்க கூறினார்.
தன்னுடைய தாயின் இறுதிச் சடங்கு பற்றி அவர் பேசும் போது... “என் தந்தையின் இறுதிச் சடங்கு செய்யப்பட்ட இடத்திலேயே தான் என் தாயாரின் (சர்தா சின்ஹா) இறுதிச் சடங்குகளும் நடைபெறும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனவே, நாளை அவரது உடலை பாட்னாவிற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.” என தெரிவித்தார்.
45
Sharda Sinha last Rites
அதன்படி சர்தா சின்ஹாவின் உடல் நவம்பர் 6, புதன்கிழமை காலை டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். அங்கு அவரை அடக்கம் செய்வதற்கான சடங்கு தொடங்குவதற்கு முன்பு அவரது பூத உடல் பொது அஞ்சலிக்கு அவரது வீட்டில் வைக்கப்படும். அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலம் குல்பி கட்டில் நடைபெறும். இதில் சர்தாவின் குடும்பத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். சர்தாவின் மரண செய்தியை அறிந்து பாரத பிரதமர் மோடி, தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பீகார் கோகிலா' என்றும் அழைக்கப்படும் சர்தா சின்ஹா, போஜ்புரி, மைதிலி மற்றும் மகாகி இசையில் குறிப்பிடத்தக்க பாடல்களை பாடியுள்ள ஒரு பிரபல இந்திய நாட்டுப்புறப் பாடகி ஆவார். பீகாரின் பாரம்பரிய இசையை பிரபலப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். கெல்வா கே பாட் பர் உகலன் சூரஜ் மல் ஜாக்கே ஜூகே, ஹே சாத்தி மையா, ஹோ தினநாத், பஹங்கி லசகத் ஜாயே, ரோஜே ரோஜே உகேலா, சுனா சாத்தி மாய், ஜோதே ஜோதே சுபவா மற்றும் பாட்னா கே காட் பர் போன்றவை போன்ற மிகவும் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். இசை துறையில் சிறந்து விளங்கிய இவருக்கு, 2018 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.