சினிமாவை விட்டு விலகி 23 வருஷம் ஆகியும் கோடீஸ்வரியாக வாழும்; இந்த ஜீரோ பிளாப் நடிகை யாருன்னு தெரியுதா?

First Published | Nov 6, 2024, 3:37 PM IST

திரையுலகில் இருந்து, கடந்த 23 வருடங்களாக விலகி இருந்தாலும், தற்போது வரை ஏராளமான ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாக உள்ள இந்த குழந்தை யார் என்று தெரியுமா?
 

Shalini Childhood Photo

குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகும் பலர், டீன் ஏஜ் வயதை கடந்த பின்னர், திரை உலகில் ஹீரோ - ஹீரோயினாக அறிமுகமாகும் போது, அவர்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால் ஒருசிலர் தங்களின் முதல் படத்திலேயே ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் தன்னுடைய முதல் படத்திலேயே முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த ஹீரோயின் தான் இந்த குழந்தை நட்சத்திரம்.
 

Shalini Child Artist Movie

1983 ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான Ente Mamattikkuttiyammakku  என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாலினி. இந்த படத்தில் ஷாலினி நடிக்கும் போது அவருக்கு நான்கு வயது மட்டுமே நிரம்பி இருந்தது. முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஷாலினி இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் விருதை வென்றார்.

இந்த படத்தை தொடர்ந்து, தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், அர்ஜுன்  உள்ளிட்ட பல பிரபலங்களின் படத்தில் நடித்தார். அதே போல் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் மாமூட்டி, மோகன் லால், சிரஞ்சீவி, போன்ற நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஷாலினி.

பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல பாடகி புற்றுநோயால் காலமானார்!

Tap to resize

Shalini Turn to Heroine

கடைசியாக ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ் திரைப்படம் 'வருஷம் 16' இந்த படத்திற்கு பின்னர், தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். சுமார் 7 வருட இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய 18 வயதில், ஷாலினி மலையாளத்தில் இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் நடித்த திரைப்படம் 'அந்நியாதி பிராவு'. இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தார் இயக்குனர் ஃபாசில்.

அதன்படி, இப்படம் 'காதலுக்கு மரியாதை' என்கிற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. இதில் ஹீரோவாக தளபதி விஜய் நடிக்க, ஹீரோயினாக ஷாலினியே நடித்திருந்தார். இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பல முன்னணி இயக்குனர்கள் போட்டி போட்டாலும், துளியும் கவர்ச்சி காட்ட கூடாது என்பதில் ஷாலினி உறுதியாக இருந்தார். தன்னுடைய மனதிற்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.

Ajith and Shalini Movie Amarkalam

அப்படி இவர் தேர்வு செய்த படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழில் காதலுக்கு மரியாதை படத்திற்கு பின்னர் இவர், இயக்குனர் சரண் இயக்கத்தில் நடித்த திரைப்படம் 'அமர்க்களம்' இந்த படத்தில் நடிக்கும் போது தான், அஜித்தை காதலிக்க துவங்கினார். அஜித்தை காதலிக்கும் போது  இவர் தமிழில் நடித்த அலைபாயுதே, மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

கண்டுகொள்ளாத விஜய்; அஜித் மனைவி செய்த உதவி? திடீர் என நடந்த ஷாலினி - சங்கீதா சந்திப்பின் பின்னணி என்ன?

Shalini lovable Family

திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே... ஷாலினி 2000 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்டு,கணவரின் குடும்ப விருப்படி திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார். இவர்கள் இவருவரின் காதலுக்கு அடையாளமாக, அஜித் - ஷாலினி நட்சத்திர ஜோடிக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்கிற மகள் பிறந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஆத்விக் என்கிற மகன் பிறந்தார்.
 

Shalini Net Worth

கடந்த 23 வருடங்களாக திரையுலகை விட்டு விலகியே இருக்கும் நடிகை ஷாலினியின், தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 350 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அஜித் தன்னுடைய மனைவியின் பெயரில் தான் பல சொத்துக்களை வாங்கி போட்டுள்ளாராம். அதே போல் ஷாலினி ஹீரோயினாக நடிக்கும் போதே 1 படத்திற்கு சுமார் 50 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும், அதை கொண்டு அவர் சில சொத்துக்களை வாங்கி வைத்திருந்தார். அதன் மதிப்பு தற்போது பல கோடி என கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா முன் சூர்யா மானத்தை வாங்கிய கார்த்தி; ஜோதிகா பற்றிய சீக்ரெட்டை தம்பியிடம் சொல்வாரா?
 

Latest Videos

click me!