கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடலில் பூஜா ஹெக்டே உடன் செம சூப்பராக டான்ஸ் ஆடி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ள நடிகர் செளபின் சாஹிர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமை திறந்தாலே கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல் தான் தற்போது அதில் ஆக்கிரமித்து உள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பாடலை சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடி உள்ளார். இதில் வரும் ராப் வரிகளை அசல் கோலார் பாடி உள்ளார். இப்பாடலுக்கு விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இப்பாடல் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. கேட்ட உடனே பிடிக்கும் ரகத்தில் இருந்த அப்பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக பூஜா ஹெக்டே மற்றும் செளபின் சாஹிரின் நடனம் அமைந்திருந்தது. சொல்லப்போனால், பூஜா ஹெக்டேவை விட செளபினின் நடனத்திற்கு தான் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
24
யார் இந்த செளபின் சாஹிர்?
மலையாள நடிகரான செளபின் சாஹிர், கூலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இவர் இயக்குனர் சித்திக்கிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கையேதும் தூரத் என்கிற மலையாள படம் மூலம் நடிகராக அறிமுகமான இவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படத்தில் பிடி மாஸ்டராக நடித்திருப்பார் செளபின். சாய் பல்லவியை இம்பிரஸ் பண்ண இவர் செய்யும் சேட்டைகள் செம காமெடியாக இருக்கும். இதையடுத்து சார்லி, மகேஷிண்ட பிரதிகாரம், கலி, கும்பலிங்கி நைட்ஸ் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார் செளபின் சாஹிர்.
34
ஒரே படத்தில் ஓஹோனு மாறிய செளபின் வாழ்க்கை
மலையாளத்தில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வந்த செளபின் சாஹிர், பான் இந்தியா அளவில் பிரபலமானது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் தான். மலையாள திரையுலகில் முதன்முறையாக 200 கோடி வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் குட்டன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் செளபின். இப்படத்தில் நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் இருந்தார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் அவருக்கு கூலி திரைப்படத்தில் தயாள் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மலையாள திரையுலகில் நடிப்பு அரக்கனாக வலம் வருபவர் பகத் பாசில். இவரை தான் கூலி படத்தில் இடம்பெறும் தயாள் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அவர் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுத்த நிலையில், அந்த வாய்ப்பு செளபினுக்கு சென்றிருக்கிறது. அந்த வாய்ப்பை அவர் அற்புதமாக பயன்படுத்தி இருக்கிறார் என்பது மோனிகா பாடலின் மூலமே தெரிகிறது. பூஜா ஹெக்டேவையே மிஞ்சும் அளவுக்கு தன்னுடைய நடன அசைவுகளால் ரசிகர்களை ஈர்த்துள்ளார் செளபின். கூலி படத்துக்கு பின் இவர் அடுத்த பகத் பாசிலாக உருவெடுக்கவும் வாய்ப்பு உள்ளது.