கோலிவுட்டில் அடுத்த விவாகரத்தா? கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா; வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த சோஹைல்

Published : Jul 21, 2025, 08:48 AM IST

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் தன்னுடைய கணவரை பிரிந்துவிட்டதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.

PREV
15
Hansika Motwani Divorce Rumours

ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஹன்சிகா. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆரம்பத்தில் பப்ளி பேபியாக இருந்த ஹன்சிகா, போகப் போக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார். அவர் ஒல்லியான பின்னர் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இதனால் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார் ஹன்சிகா.

25
ஹன்சிகா திருமணம்

சினிமாவில் மார்க்கெட் போனதால் இல்லற வாழ்க்கையில் நுழைய முடிவெடுத்த ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கத்தூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஹன்சிகாவின் தோழியை தான் அவர் முதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டதால் முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த சோஹைல், ஹன்சிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

35
கணவரை பிரிந்தாரா ஹன்சிகா?

நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தங்களுடைய முதல் திருமண நாளுக்கு கணவருடன் இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்ட அவர் அதன்பின்னர் ஓராண்டுக்கு மேலாக கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிடாமல் இருந்து வந்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சோஹைலின் குடும்பம் மிகப்பெரியது என்பதால் அவர்களுடன் ஹன்சிகாவுக்கு ஒத்துப்போகாததால் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஹன்சிகா தற்போது தனது தாயார் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.

45
பிரிவு பற்றி சோஹைல் விளக்கம்

ஹன்சிகா, சோஹைலை பிரிந்துவிட்டதாக தகவல் கசிந்ததும், விவாகரத்துக்கு தயாராகிறார்களா என்கிற கேள்வி எழத் தொடங்கியது. இதுபற்றி ஹன்சிகா எந்தவித விளக்கமும் கொடுக்காமல் அமைதி காத்து வரும் நிலையில், சோஹைல் கத்தூரியா இந்துஸ்தான் டைம்ஸுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி தங்களைப் பற்றி பரவும் தகவல் உண்மையில்லை என அவர் கூறி உள்ளார். இருப்பினும் பிரிந்து வாழ்வது உண்மையில்லையா அல்லது விவாகரத்து செய்தி உண்மையில்லையா என்கிற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டாராம். இதனால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

55
தொடரும் விவாகரத்து

சினிமா பிரபலங்கள் விவாகரத்து பெற்று வருவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து நடிகர் தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார். பின்னர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பாடகி சைந்தவியும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அண்மையில் ஜெயம்ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories