சினிமாவைப் பொறுத்த வரையில் ஒரு படத்திற்கு பூஜை போடுவதிலிருந்து படம் வெளியாகும் வரையில் ஒரு தயாரிப்பாளர் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில், சம்பளம் தொடர்பான பிரச்சனையும் உண்டு. அப்படி ஒரு பிரச்சனை தான் உதவி இயக்குநருக்கு நடந்திருக்கிறது. அறம் படத்தின் இயக்குநரான கோபி நயினார் தனக்கு 4 வருடங்களாக சம்பளம் தரவில்லை என்று உதவி இயக்குநர் புகார் அளித்துள்ளார்.
23
கோபி நயினார் மீது வழக்கு
கடந்த 2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலமாக பிரபலமானவர் இயக்குநர் கோபி நயினார். கருப்பர் நகரம் படங்களை இயக்குவதற்கான வேலைகளை மேற்கொண்டார். ஆனால் இந்தப் படம் கைவிடப்பட்டது. மேலும், மனுஷி என்ற படத்தை இயக்கினார்.
இந்தப் படம் ரிலீசிற்காக தயாராகி வருகிறது. பல போராட்டங்களை கடந்து தனது படைப்புகளை கொடுத்து வருகிறார். இந்த சூழலில் தான் அவர் மீது உதவி இயக்குநரான ராஜ்கமல் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியிருப்பதாவது: நான் 4 ஆண்டுகளாக கோபி நயினாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ஆனால், சம்பளமாக அவர் எதுவும் கொடுக்கவில்ல. திருமணம் நடைபெற்ற போதும் கூட சம்பளமும் கொடுக்கவில்லை.
33
4 வருடங்களாக சம்பளம் தரவில்லை
இதைப் பற்றி பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். இதன் காரணமாக உன்னால் எனக்கு கெட்ட பெயர் தான் என்று கண்டிக்க ஆரம்பித்தார். மேலும், எங்களைப் பற்றி தவறாக பேசி ஊரிலிருந்து விலகி இருக்கும் நிலையும் ஏற்பட்டது. அடியாட்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வருகிறார். என்னை மட்டுமின்றி பல உதவி இயக்குநர்களையும் கோபி நயினார் மிரட்டியுள்ளார். இப்போது நான் கோபி நயினார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். என்னையும் எனது குடும்பத்தையும் அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கோபி நயினார் கூறியிருப்பதாவது: எனக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னிடம் உதவி இயக்குநராக வேலை செய்ததற்கான எந்த காரணமும் இல்லை. என் மீது அவதூறு பரப்புகிறார்கள். என் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நானும் ராஜ்கமல் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.