பளார் பளாருன்னு 15 முறை அறைந்த கோமதி – போலீசில் புகார் கொடுக்க நினைக்கும் பாண்டியன்!

Published : Jul 20, 2025, 11:45 AM IST

தனது மகளின் இந்த நிலைமைக்கு காரணமான சுகன்யாவின் கன்னத்தில் பளார் பளாருன்னு 15 முறை அறைந்து கோமதி தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அவர் மீது காட்டியுள்ளார்.

PREV
17
எல்லாத்துக்கும் காரணம் சுகன்யாவா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குடும்பத்தில் மறைந்த கிடந்த ஒவ்வொரு ரகசியமும் இப்போது ஒன்று ஒன்றாக வெளிப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அரசு வேலை கிடைக்க ரூ.10 லட்சம் கொடுத்தது, அந்தப் பணம் எப்படி கிடைத்தது யார் கொடுத்தது என்ற உண்மை, அதன் பிறகு அத்தைக்கு நிச்சயதார்த்தம் நின்றதற்கான செலவிற்கு கொடுத்த ரூ.10 லட்சம் என்று எல்லா உண்மையும் முதலில் தெரிந்தது.

27
சுகன்யா பற்றிய எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்ட கோமதி

அதன் பிறகு ராஜீயின் நகையில் பாதியை போலீசார் மீட்டு கொடுத்தனர். இதையடுத்து முக்கிமான காட்சியாக அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேலு வீட்டில் அவரை பழி தீர்க்க சென்ற உண்மை என்று எல்லா உண்மையும் கோமதி, பாண்டியன் உள்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது.

37
சுகன்யா பற்றிய உண்மையை வெளிப்படுத்திய மீனா

மேலும், ஏற்கனவே அரசி தனக்கு தானே தாலி கட்டியது தங்களுக்கு தெரியும் என்று மீனா மற்றும் ராஜீ இருவரும் அந்த உண்மையையும் வெளிப்படுத்தினர். சதீஷ் உடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் அரசியிடம் பேச வேண்டும் என்று குமரவேல் ஆசைப்பட்டதாக கூறி சுகன்யா தான் அழைத்து சென்றதாக கூறினார். 

47
தனக்கு தானே தாலி கண்டிய அரசியை வீட்டிற்கு அழைத்து வந்த பாண்டியன்

மேலும், குமரவேலுவை திருமணம் செய்தால் தான் ரெண்டு குடும்பமும் ஒன்று சேரும் என்றும், கல்லூரிக்கு சென்றது, தியேட்டருக்கு சென்றது என்று எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது சுகன்யா தான் என்று எல்லா உண்மைகளையும் மீனா மற்றும் ராஜீ இருவரும் போட்டு உடைத்துவிட்டனர்.

57
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இதே போன்று அரசியும் தன் பங்கிற்கு எல்லா உண்மைகளையும் சொல்லவே, இதுவரையில் சைலண்டாக இருந்த கோமதி இப்போது மகளுக்கு ஒன்று என்றதும் வைலண்டாக மாறிவிட்டார். வந்த கோபத்தில் பளார் பளார் என்று அறைந்தார். கோபம் தீரவில்லை, மாறி மாறி ரெண்டு கன்னத்திலும் அடித்துக் கொண்டே இருக்க ஒரு 15 முதல் 17 அறை வரை விழுந்திருக்கும். அந்தளவிற்கு சுகன்யா மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

67
கோமதி மற்றும் அரசி

பற்றாக்குறைக்கு பழனிவேலும் தன் பங்கிற்கு சுகன்யா பண்ண எல்லா டார்ச்சர்களையும் எப்படி அனுபவிச்சேன் என்ற உண்மையை பாண்டியனிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இப்படி தனது மகளுக்கும், பழனிவேலுவிற்கும் நடந்த கொடுமைகளை எல்லாம் கேட்ட பிறகு பாண்டியன் அதிரடியாக ஒரு முடிவெடுத்தார். அதைப் பற்றி பொறுமையாக பேசி முடிவு எடுப்போம் என்றார்.

77
அரசி மற்றும் சுகன்யா

ஆனால், அதற்கு முன்னதாக பாண்டியன் குமரவேல் பற்றி போலீசில் புகார் அளிக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறினார். அதற்கு கதிர், அதெல்லாம் முடியாது அவனை என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று குமாரவேலை பழிதீர்க்க ரெடியாக இருப்பதாக அப்பாவிடம் கூறுகிறார். அதோடு எபிசோடு முடிந்தது. இனி நாளை நடைபெறும் எபிசோடில் என்ன நடக்க்கிறது என்பதை பொறுமையாக பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories