Published : Jul 19, 2025, 10:20 PM ISTUpdated : Jul 19, 2025, 10:22 PM IST
Killer Movie First Look Poster Released : ஹீரோயினை தூக்கி நின்றவாறு போஸ் கொடுத்திருக்கும் எஸ் ஜே சூர்யாவின் கில்லர் பட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Killer Movie First Look Poster Released : இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா நாளை 20ஆம் தேதி தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் கில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. நெத்தியபடி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. ஆனால், அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. அதன் பிறகு நியூ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
26
கில்லர் படத்தை இயக்கி நடிக்கும் எஸ் ஜே சூர்யா
இந்தப் படத்தைத் தொடர்ந்து அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, இசை, இறைவி, ஸ்பைடர், மெர்சல், மாநாடு என்று பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்தாலும் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் வில்லனாக அறிமுகமானார். மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.
36
எஸ் ஜே சூர்யாவின் கில்லர் மூவி போஸ்டர்
இதைத் தொடர்ந்து வில்லனாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது இந்தியன் 3, லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா நடிப்பில் கில்லர் படமும் உருவாகி வருகிறது.
46
எஸ் ஜே சூர்யா கொடூரமான வில்லன்
இந்தப் படத்தை தானே இயக்கி நடிக்கிறார். இந்த நிலையில் தான் எஸ் சூர்யா நாளை தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் பிறந்தநாளையொட்டி தனது நடிப்பில் உருவாகி வரும் கில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்ட் செகண்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
56
எஸ் ஜே சூர்யாவின் மார்க் ஆண்டனி
என் அன்பும் ஆருயிருமான ரசிகர்கள் மற்றும் நண்பர்கள், உங்கள் அனைவருக்கும் எனது பிறந்தநாள் பரிசாக கில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளேன். நாளை காலை நீங்கள் அனைவரும் உங்களது பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள், நானும் என்னுடைய பிரார்த்தையில் உங்களை சேர்த்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். எஸ் ஜே சூர்யாவின் இந்த பதிவு மற்றும் போஸ்டரை பகிர்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
66
எஸ் ஜே சூர்யா நடித்த படங்கள்
எஸ் ஜே சூர்யா வெளியிட்ட போஸ்டரில் ஒரு போஸ்டரில் ஹீரோயினை தூக்கி நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார். அதே போன்று மற்றொரு போஸ்டரில் கையில் துப்பாக்கியை வைத்திருப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார். இந்த 2 போஸ்டர்களிலும் கார் காட்டப்பட்டுள்ளது. சசிகுமார் நடித்த அயோத்தி படத்தில் நடித்த மராத்தி நடிகையான ப்ரீத்தி அஸ்ரானி இந்தப் படத்தில் நடிக்கிறார். இவர் எலெக்ஷன், கிஸ் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் படமான லவ், காமெடி மற்றும் ஆக்ஷன் கதைகளை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.