முன்னாள் முதல்வரின் மகளா? யார் இந்த ரம்யா?

First Published | Dec 10, 2024, 11:13 AM IST

MP Ramya : தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பிரபலமானவரும், காங்கிரஸ் முன்னாள் எம்பி-யுமான நடிகை ரம்யா பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kuthu Ramya

குத்து ரம்யா

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் ரம்யா. இவர் கடந்த 2001-ம் ஆண்டு அப்பு என்கிற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரம்யா. இவரின் இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா. அப்பு படத்தின் அவர் நடித்த திவ்யா கேரக்டர் பெரியளவில் ரீச் ஆனதால் தன் பெயரை ரம்யா என மாற்றிக் கொண்டார். பின்னர் சிம்பு நடித்த குத்து படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் ரம்யா.

Divya Spandana

ரம்யா நடித்த தமிழ் படங்கள்

குத்து படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரை கோலிவுட்டில் குத்து ரம்யா என அழைக்கத் தொடங்கினர். பின்னர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக பொல்லாதவன், கெளதம் மேனனின் மாஸ்டர் பீஸ் படமான வாரணம் ஆயிரம் ஆகியவற்றில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதி்ல் நீங்கா இடம்பிடித்த ரம்யா, கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை. 

Tap to resize

MP Ramya

ரம்யாவின் அரசியல் பயணம்

கடந்த 2012-ம் ஆண்டே சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியலில் இறங்கினார் ரம்யா. காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணா தான் இவரின் அரசியல் வழிகாட்டி. இதை ரம்யாவே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்!

Rumours about Ramya

ரம்யா பற்றிய வதந்திகள்

எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸின் இருந்து பாஜகவிற்கு தாவியது போல் ரம்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி பரவியது. ஆனால் அதையெல்லாம் மறுத்த திவ்யா, காங்கிரஸ் கட்சியின் ஐடி விங் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். இவரைப்பற்றிய வதந்திகளும் அதிகளவில் உலா வருவதுண்டு. கடந்தாண்டு இவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் தான் வெளிநாட்டில் நலமாக இருப்பதாக விளக்கம் அளித்தார் ரம்யா.

SM Krishna

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகளா ரம்யா?

அதேபோல் இவர் மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணாவின் மகள் என்கிற வதந்தியும் வெகுநாட்களாக பரவி வந்தன. ஆனால் இதுபற்றி ரம்யாவே ஒரு பேட்டியில் ஓப்பனாக கூறி இருக்கிறார். நான் எஸ்.எம் கிருஷ்ணாவின் மகளோ, பேத்தியோ, தங்கச்சியோ இல்லை என வெளிப்படையாக கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் ரம்யா. இன்று எஸ்.எம்.கிருஷ்ணா காலமான நிலையில், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திவ்யா, தான் அரசியலுக்கு வர முக்கிய காரணமே அவர் தான் என நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... பெங்களூரு என்ற பிராண்டை உருவாக்கியவர்! மறைந்த எஸ்.எம்.கிருஷ்ணாவின் அரசியல் வாழ்க்கை ஓர் பார்வை!

Latest Videos

click me!