Jayam Ravi Upcoming Movies, Daudee Jiwal Net Worth
Daudee Jiwal Movies and Net Worth Details : ஓடிடி வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் புதுமுகங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்த தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இப்போது நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் எஸ்கே25 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
Tamilnadu DGP Shankar Jiwal, Jayam Ravi New Movie
இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். இது ஜெயம் ரவியின் 34ஆவது படம். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். இவர் யார்? இவருடைய சொத்து மதிப்பு என்பது குறித்து பார்க்கலாம்.
Shankar Jiwal, Shankar Jiwal Daughter
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஷங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால். இந்த ஆண்டின் தொடக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் ஜீவா ஆகியோர் நடிக்கும் படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்தப் படங்கள் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே கைவிடப்பட்டது. இந்த நிலையில் தான் இப்போது ஜெயம் ரவி நடிக்கும் அவருடைய 34ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
JR34, Jayam Ravi, Who is Daudee Jiwal
இந்தப் படத்திற்கான பூஜை 14ஆம் தேதி போடப்பட்டது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர், இதில் இயக்குநர் வாசுவின் மகன் சக்தி வாசுவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தவ்தி ஜிவாலைப் பற்றிய விவரங்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றாலும் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.