பார்க்க ஹீரோயின் மாதிரி இருக்காங்களே? இவங்க தான் லோகேஷ் கனகராஜின் சகோதரியா?

First Published | Aug 21, 2024, 12:04 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தங்கை என்று கூறி ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. The Route என்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் அவந்திகா கனகராஜ் என்பவர்தான் அவர் என்று கூறப்படுகிறது. 

Lokesh Kanagaraj Avantika Kangaraj

தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். 2017-ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற பிளாக்பஸ்டர் படத்தை வழங்கினார். 

Lokesh Kanagaraj

கைதி படத்தை இயக்கும் போதே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. அப்படி அவர் இயக்கிய படம் மாஸ்டர். மாஸ்டர் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் திரையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக மாறினார்.

கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ்; ரசிகர்களை மிரள வைத்த டாப் 5 சைக்கோ த்ரில்லர் தமிழ் படங்கள்!

Tap to resize

Lokesh Kanagaraj

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து இயக்கிய படம் விக்ரம். கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 2022-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் மாறியது. மேலும் விக்ரம் படத்தில் LCU கான்செப்ட் மூலம் கவனம் ஈர்த்தார்.

Lokesh Kanagaraj

மீண்டும் விஜய் உடன் கைகோர்த்த லோகேஷ் லியோ படத்தை இயக்கினார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனிடையே ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்ற ஆல்பம் மூலம் நடிகராக மாறினார். ரஜினியின் கூலி படத்தை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

Avantika Kanagaraj

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தங்கை என்று கூறி ஒருவரின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பெயர் அவந்திகா கனகராஜ். The Route என்ற தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். லியோ படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் பழனிசாமி என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியதால் டைவர்ஸ் ஆச்சுனு சொன்னாங்க... உண்மை இதுதான் - சாந்தினி ஓபன் டாக்

Avantika Kanagaraj

திரைப்பட நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்த நிறுவனம் ஒருங்கிணைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தில் தான் அவந்திகா முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவந்திகா அவ்வப்போது புதிய படங்களின் அப்டேகளை வெளியிட்டு வருகிறார்.

Avantika Kanagaraj

மேலும் பல பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கும் அவந்திகாவின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. 

Avantika Kanagaraj

லோகேஷ் கனகராஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாமல் தவிர்த்து வருகிறார். அவருக்கு ஐஸ்வர்யா லோகேஷ் என்ற மனைவியும், ஆருத்ரா என்ற மகனும், ஆத்விகா என்ற மகளும் இருக்கின்றனர். மேலும் லோகேஷ்க்கு அரவிந்த், அஸ்வின், பிரசாந்த் என்ற 3 சகோதர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவந்திகா கனகராஜ் லோகேஷின் சகோதரி இல்லை என்றும் கூறப்படுகிறது.

Latest Videos

click me!