கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ்; ரசிகர்களை மிரள வைத்த டாப் 5 சைக்கோ த்ரில்லர் தமிழ் படங்கள்!

Published : Aug 21, 2024, 10:22 AM IST

விறுவிறுப்பு நிறைந்த சஸ்பென்ஸ் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் கூடிய டாப் 5 சைக்கோ த்ரில்லர் படங்கள் மற்றும் அவற்றை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்த தகவல்கள் இங்கே.

PREV
16
கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ்; ரசிகர்களை மிரள வைத்த டாப் 5 சைக்கோ த்ரில்லர் தமிழ் படங்கள்!
Tamil Psycho Thriller Movies

கிரைம் த்ரில்லர், காதல், ஆக்ஷன், பேய் படங்கள், காமெடி, டார்க் காமெடி என பலவகையான தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில் சைக்கோ த்ரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் பலர் உள்ளனர். சஸ்பென்ஸ், ட்விஸ்ட், என விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த டாப் 5 சைக்கோ த்ரில்லர் படங்கள் குறித்தும் அவற்றை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

26
Nibunan

நிபுணன் :

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன், வரலட்சுமி சரத்குமார், வைபவ் உள்ளிட்டோ நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் நிபுணன். இந்த சைக்கோ த்ரில்லர் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் இருக்கிறது. 

பெரிய ஹீரோ இல்ல, பட்ஜெட் இல்ல, பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய தமிழ் படங்கள்!

36
Imaikka nodigal

இமைக்கா நொடிகள் 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யம் உள்ளிட்டோ நடித்திருந்த இந்த சைக்கோ த்ரில்லர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.

46
Ratchasan

ராட்சசன் :

ராம்குமார் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ராட்சசன். இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் உள்ளது.

விஜய், ரஜினி, கமலையே ஓடவிட்டவர்... சிறுத்தை சிவாவின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவங்கள் ஒரு பார்வை

56
Psycho

சைக்கோ :

மிஷ்கின் இயக்கத்தில் 2020-ம் ஆண்டு வெளியான படம் சைக்கோ. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சைக்கோ.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் உள்ளது.

66
Vettaiyadu vilaiyadu

கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006- ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம். 

Read more Photos on
click me!

Recommended Stories