செல்பி கேட்டது குத்தமா? சிவக்குமார் முதல் பாலகிருஷ்ணா வரை... ரசிகர்களை மிரள விட்ட நடிகர்கள்!

Published : Aug 21, 2024, 10:21 AM IST

ஆசை ஆசையாக செல்பி எடுக்க வந்த ரசிகர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட சினிமா பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
செல்பி கேட்டது குத்தமா? சிவக்குமார் முதல் பாலகிருஷ்ணா வரை... ரசிகர்களை மிரள விட்ட நடிகர்கள்!
Actors selfie Controversy

நடிகர், நடிகைகள் மிகவும் பேமஸ் ஆவதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். அப்படிப்பட்ட ரசிகர்களை சில சினிமா பிரபலங்கள் தரக்குறைவாக நடத்தி இருக்கிறார். அதுவும் செல்பி எடுக்க வந்தபோது போனை தட்டிவிடுவது, கன்னத்தில் அறைவிடுவது போன்ற செயல்களை செய்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய நடிகர்கள் பற்றியும் அவர்கள் செய்த ஷாக்கிங் சம்பவம் பற்றியும் தற்போது பார்க்கலாம்.

26
Balakrishna

பாலகிருஷ்ணா

தெலுங்கு திரையுலகில் சர்ச்சையின் மறு உருவமாக இருந்து வரும் நடிகர் என்றால் அது பாலகிருஷ்ணா தான். தன்மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜெய் பாலய்யா என கோஷமிட்ட ரசிகரை பளார் என அறைவிட்டார் பாலகிருஷ்ணா. அதுமட்டுமின்றி ஆசையாக செல்பி எடுக்க வந்த ரசிகர்கரின் போனை தட்டிவிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியது. இப்படிப்பட்ட பாலகிருஷ்ணாவையே ஒரு நடிகை அடித்திருக்கிறார். ஒருமுறை தெலுங்கு படத்தில் நடிக்க சென்றிருந்த நடிகை ராதிகா ஆப்தேவை பாலகிருஷ்ணா பின்னால் தட்டினாராம். இதனால் கடுப்பான ராதிகா அந்த இடத்திலேயே பாலய்யாவுக்கு பளார் என அறைவிட்டு இருக்கிறார்.

36
Sivakumar

சிவக்குமார்

நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தையும் நடிகருமான சிவக்குமார், தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை தட்டிவிட்டு சென்றது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி அண்மையில் தன்னுடைய நண்பர் ஒருவர் சால்வை அணிவிக்க வந்தபோது அதை பிடுங்கி எறிந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமானின் இந்த 3 மாஸ்டர் பீஸ் பாடல்களும் ஒரே நாள் இரவில் உருவானது... நீங்க நம்பலேனாலும் அது தான் நிஜம்!

46
Ajith

அஜித்குமார்

பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாதவர் அஜித்குமார். அவர் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வாக்களிக்க வந்திருந்தார். அப்போது வரிசையில் நின்றுகொண்டிருந்த அவருடன் செல்பி எடுக்க ரசிகர் ஒருவர் வந்திருந்தார். இதனால் கடுப்பான அஜித் அந்த ரசிகரின் போனை பிடுங்கிக் கொண்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வாக்களித்து திரும்பிய பின்னர் போனை அந்த ரசிகரிடம் கொடுத்தார் அஜித்.

56
Nayanthara

நயன்தாரா

நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் கடந்த ஆண்டு குலதெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது தராசூரம் கோவிலுக்கு சென்ற நயன்தாரா மீது கைபோட்டு ஒரு பெண் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கடுப்பான நயன்தாரா, அவரை பார்த்து முறைத்தது பரபரப்பாக பேசப்பட்டது.

66
nagarjuna

நாகார்ஜுனா

நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் குபேரா படத்தில் நடிக்கிறார். அண்மையில் ஐதராபாத் விமான நிலையத்திற்கு நாகார்ஜுனா வந்தபோது அவரை சந்திக்க ரசிகர் ஒருவர் வந்தபோது அவரை பவுன்சர்கள் தரதரவென இழுத்து போட்டனர். இதை கண்டும் காணாதபடி நாகார்ஜுனா சென்றுவிட்டார். பின்னர் இந்த விஷயம் பூதாகரமானதால் அந்த ரசிகரை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்... ஜெயிலருக்கு ஹுகும்; வேட்டையனுக்கு என்ன? ரஜினி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட அனிருத்

Read more Photos on
click me!

Recommended Stories