ஜெயிலருக்கு ஹுகும்; வேட்டையனுக்கு என்ன? ரஜினி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட அனிருத்

Published : Aug 21, 2024, 07:47 AM IST

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என அனிருத் அறிவித்துள்ளார்.

PREV
14
ஜெயிலருக்கு ஹுகும்; வேட்டையனுக்கு என்ன? ரஜினி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட அனிருத்
Vettaiyan

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தை ஞானவேல் இயக்கி உள்ளார். அவர் இதற்கு முன்னர் கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

24
Vettaiyan Rajinikanth

வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. வேட்டையன் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருக்கிறார். அப்பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... மகள் மாதிரினு சொல்லி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணிட்டாரு - பாலு மகேந்திராவின் காதல் லீலைகளை சொன்ன வடிவுக்கரசி

34
Vettaiyan First Single

மேலும் அப்பாடலை நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனான சூப்பர் சுப்பு தான் எழுதி இருக்கிறார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுகும் பாடலுக்கும் அவர் தான் பாடல் வரிகள் எழுதி இருந்தார். அவரின் வரிகளால் இம்பிரஸ் ஆன சூப்பர்ஸ்டார் மீண்டும் வேட்டையன் படத்திலும் அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இப்படத்திலும் சூப்பர் சுப்பு எழுதிய பாடல் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
Rajinikanth, anirudh

அதுமட்டுமின்றி வேட்டையன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு மனசிலாயோ என்கிற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் பேசும் இந்த மனசிலாயோ டயலாக் மிகவும் பேமஸ் ஆனதை தொடர்ந்து அதே தலைப்பில் தற்போது ஒரு பாட்டையே கம்போஸ் செய்து முடித்திருக்கிறார் அனிருத். அப்பாடல் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ஹுகும் அளவுக்கு ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு குடும்பத்தையே காப்பாற்றிய MGR! ஆர். சுந்தர்ராஜன் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories