கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு குடும்பத்தையே காப்பாற்றிய MGR! ஆர். சுந்தர்ராஜன் பகிர்ந்த தகவல்!

First Published | Aug 20, 2024, 10:27 PM IST

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் எம்ஜிஆர் ரூ.25 அட்வான்ஸ் வாங்கி... 15 ரூபாயில் ஒரு குடும்பத்தையே காப்பாற்றி உள்ளார் என யாருக்கும் இதுவரை தெரியாத தகவலை கூறியுள்ளார்.
 

R Sundarrajan Movies:

தமிழ் சினிமாவில் 25-திற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் பிரபலமானவர் ஆர்.சுந்தர்ராஜன். 1977-ஆம் ஆண்டு 'அன்று சிந்திய ரத்தம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் 'பயணங்கள் முடிவதில்லை' முடிவதில்லை படத்தின் மூலம் பிரபலமானார். 

R Sundarrajan hit movies

இதை தொடர்ந்து இவர் இயக்கிய வைதேகி காத்திருந்தாள், சுகமான இராகங்கள்,     அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, என் ஜீவன் பாடுது, திருமதி பழனிச்சாமி, காலமெல்லாம் காத்திருப்பேன், போன்ற படங்களை இயக்கினார். குறிப்பாக 24 மணிநேரத்தில் எடுத்து முக்கியப்பட்ட உலக சாதனை படமான 'சுயம்வரம்' படத்தை இயக்கிய பெருமையும் இவரையே சேரும். திரைப்படங்கள் மட்டும் இன்றி, தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்... 'சிறகடிக்க ஆசை' சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரபல ஊடகம் ஒன்றில், குட்டி பத்மினியின் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பல தியேட்டர்களில் வாஷ் அவுட்டான 'தங்கலான்' 100 கோடியை எட்ட முடியாமல் தவிக்கிறாரா விக்ரம்?

Tap to resize

R Sundarrajan latest interview

குட்டி பத்மினி, எம்ஜிஆருக்கு பிறகு.... திரைத்துறையில் அதிகம் உதவும் பிரபலம் யார் என கேள்வி எழுப்ப, அதற்க்கு சுந்தர்ராஜன் அப்படி யாருமே இல்லை என கூறியுள்ளார். சிலர் உதவுவதாக சொல்லி கொள்ளலாம்... அது வேறு, ஆனால் MGR போல் யாராலும் உதவ முடியாது என்பதற்கு உதாரணம் ஒன்றையும் கூறியுள்ளார்.
 

R Sundarrajan about MGR

MGR திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய போது, வால் வீச்சு, சண்டை பயிற்சி, கம்பம் போன்ற பயிற்சிகளில் கை தேர்ந்தவர். அப்போது எம்ஜிஆரின் அண்ணன், ஒரு படத்தில் எம்ஜிஆரை வில்லனாக நடிக்க வைக்க அழைத்து செல்கிறார். அந்த சமயத்தில் 5 நாள் ஷூட்டிங்கை உறுதி செய்து ரூ.50 சம்பளமாக பேசப்பட்டு, அட்வான்ஸாக ரூ.25 ரூபாயை கொடுக்கிறார்கள்.

மறைந்த நடிகர் சோ ராமசாமியின் மனைவி சௌந்தராம்பா காலமானார்!
 

MGR helping tendency

பின்னர் எம்ஜிஆரின் அண்ணன், அவரின் அம்மாவிடம்... தம்பி காசு கொடுத்தானா என கேட்க. கொடுத்தான் என அவரின் அம்மா சொல்கிறார். எவ்வளவு என கேட்டதும் ரூ.10 கொடுத்தான் என கூறுகிறார். அவன் 25 ரூபாய் அட்வான்ஸாக பெற்றான். 10 ரூபாய் மட்டுமே உன்னிடம் கொடுத்துள்ளான் மீதம் 15ரூபாய் என்ன செய்தான் என கேளு என்று கூற, எம்ஜிஆரின் அம்மாவும் அவரிடம் இந்த 15 ரூபாய் பற்றி விசாரிக்கிறார்.
 

MGR untold story

கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் பஞ்சம் பிழைக்க வந்த அப்பா - அப்பா, இரண்டு வயது வந்த பிள்ளைகள் மற்றும் ஒரு பையனோடு வேலை கிடைக்காமல், பசி பட்டினியோடு வாடி அங்கேயே தங்கி இருந்ததை பார்த்து மனம் பொறுக்காமல் அவர்களுக்கு அந்த 15 ரூபாய் கொடுத்து உதவியதாக சொல்கிறார். இதன் பின்னர் எம்ஜிஆரின் அம்மா, இந்த பணம் பற்றி கேட்க சொன்ன மூத்த மகனிடம்... எப்படி நான் உன்னையும் உன் தம்பியையும் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் வைத்து கொண்டு பசியோடு நின்றேனோ அதே போல் நின்ற ஒரு குடும்பத்தை உன் தம்பி அந்த 15 ரூபாய் கொடுத்து காப்பாற்றி விட்டு வந்துள்ளார் என கூறினாராம். இதன் மூலம் எம்ஜிஆர் வசதியாக இருந்த போது மட்டும் அல்ல... கஷ்டப்பட்ட காலங்களில் கூட உதவியவர் என்பதை சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

ஷாலினி முதல்... லட்சுமி மேனன் வரை சொந்த குரலில் பாடிய ஹீரோயின்களின் ஹிட் பாடல்கள்!
 

Latest Videos

click me!