கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ரஜினிகாந்த் – முதலில் தோனி, 2ஆவது ரிஷப் பண்ட்!

First Published | Aug 20, 2024, 8:06 PM IST

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், ரஜினிகாந்தின் கபாலி தோற்றத்தை பிரதிபலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.தோனியும் கபாலி தோற்றத்தை பிரதிபலித்தது குறிப்பிடத்தக்கது.

Kabali

கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் மீது தாக்கமும், சினிமா நட்சத்திரங்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அதிலேயும் சினிமாவில் ரஜினிகாந்த் என்ற ஒற்றை வார்த்தைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 1975 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் சினிமாவை ஆண்டு வருகிறார். அபூர்வ ராகங்களில் தொடங்கி சமீபத்தில் வெளியான லால் சலாம் வரையில் கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.

MS Dhoni and Rajinikanth

இந்த நிலையில் தான் 2016 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் திரைக்கு வந்த கபாலி பட போஸ்டரில் இருப்பது போன்று ரிஷப் பண்ட் தோற்றத்தை உருவாக்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தலைவா ரஜினிகாந்த் என்று கேப்ஷனிட்டு வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tap to resize

Rishabh Pant and Rajinikanth

இதற்கு முன்னதாக கபாலி படம் வந்த போது ரஜினிகாந்தைப் போன்று எம்.எஸ்.தோனி ஷோபாவில் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தார். அப்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Kabali Rajinikanth and Rishabh Pant

கபாலி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த நெருப்புடா, நெருங்குடா பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவியது.

Vettaiyan

இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கிட்டத்தட்ட ரூ. 160 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!