'விடாமுயற்சி' படக்குழுவினருடன் கிளாஸாக ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் அஜித்! ரீசென்ட் போட்டோஸ்!

Published : Aug 20, 2024, 04:41 PM IST

விடாமுயற்சி படக்குழுவினருடன் அஜித் எடுத்து கொண்ட ரீசென்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
16
'விடாமுயற்சி' படக்குழுவினருடன் கிளாஸாக ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் அஜித்! ரீசென்ட் போட்டோஸ்!
Ajith in Vidaamuyarchi Team

'துணிவு' படத்தின் வெற்றிக்குப் பின்னர், அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தில், நடித்த நடிகர் - நடிகைகளுடன் அஜித் எடுத்துக் கொண்டுள்ள ரீசென்ட் போட்டோஸ், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

26
Vignesh shivan Missed Ajith movie Chance

அஜித் நடிக்கும் அனைத்து படங்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கமான ஒன்றே. அதன்படி இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அஜித் தன்னுடைய 62 ஆவது படத்தை நயன்தாராவின் காதல் கணவரான, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.

மறைந்த நடிகர் சோ ராமசாமியின் மனைவி சௌந்தராம்பா காலமானார்!

36
Lyca Rejected Vignesh shivan Story

ஆனால் இப்படத்தின் படபிடிப்பு தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே வந்ததால் இப்படம் கைவிடப்பட்டதாக சில தகவல்கள் வெளியாக தொடங்கின. பின்னர் விக்னேஷ் சிவன் கூறிய ஒன் லைன் அஜித்துக்கு பிடித்திருந்தாலும், அவர் கூறிய முழு கதையும் அஜித்துக்கும், இப்படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காததால், அதிரடியாக விக்னேஷ் சிவனை 62 ஆவது படத்தில் இருந்து படக்குழு வெளியேற்றியது. இயக்குனர் மகிழ் திருமேனி கூறிய கதை பிடித்திருந்ததால், அவரே அஜித்தின் 62 ஆவது பட இயக்குனராக முடிவு செய்யப்பட்டார்.

46
Trisha Pair with Ajith

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம், கடந்த ஆண்டு துவங்கப்பட்டு,  இப்படத்தின் பெருவாரியான காட்சிகள் தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டில் தான் படமாக்கப்பட்டு வந்தது. இயக்குனர் மகிழ் திருமேனி ஒரு வழியாக இப்படத்தின் பணிகளை முடித்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அஜித் நடித்துள்ள இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் திரிஷா நடித்துள்ளார். அர்ஜுன் சர்ஜா,  ரெஜினா, நிகில் நாயகர் போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பல தியேட்டர்களில் வாஷ் அவுட்டான 'தங்கலான்' 100 கோடியை எட்ட முடியாமல் தவிக்கிறாரா விக்ரம்?

56
Vidaamuyarchi is Action Compact Movie

அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாக்கிய இந்த படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார், விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில்... இதுவரை லைக்கா நிறுவனம் தயாரித்த பிக் பட்ஜெட் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் இப்படம் அதனை ஈடுகட்டுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
 

66
Vidamuyarchi Team Recent Photos

இந்நிலையில் அஜித் தற்போது விடாமுயற்சி படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட ரீசென்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது. அதில் அஜித் ஒயிட் அண்ட் ஒயிட்  உடையில், ரெட் கலர் கூலர்ஸை ஸ்டைலிஷ் ஆக தன்னுடைய சர்ட்டில் தொங்கவிட்டபடி போஸ் கொடுத்துள்ளார். இதில் த்ரிஷா, ஆரவ், ரெஜினா போன்ற பலர் உள்ளனர். இந்த போட்டோ அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஷாலினி முதல்... லட்சுமி மேனன் வரை சொந்த குரலில் பாடிய ஹீரோயின்களின் ஹிட் பாடல்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories