பல தியேட்டர்களில் வாஷ் அவுட்டான 'தங்கலான்' 100 கோடியை எட்ட முடியாமல் தவிக்கிறாரா விக்ரம்?

First Published | Aug 20, 2024, 2:26 PM IST

'தங்கலான்' திரைப்படம் விமர்சன ரீதியாக... ஒரு பக்கம் பாராட்டுகளை குவித்து வந்தாலும், வசூல் ரீதியாக 100 கோடியை எட்ட போராடி வருவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
 

Thangalaan

இயக்குனர் பா.ரஞ்சித் 'சார்பட்டா' படத்திற்கு போட்ட உழைப்பு, அர்ப்பணிப்பை விட 100 மடங்கு போட்டுள்ள படம், 'தங்கலான்'. இந்த படத்திற்காக விக்ரம், மாளவிகா, பார்வதி, போன்ற முன்னணி நடிகர்களின் உழைப்பு அதிகம் அவனிக்கப்பட்டாலும், இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு துணை நடிகர்களின் உழைப்பும் போற்ற தக்க ஒன்றே.
 

Thangalaan Movie Real Based Story:

தங்கம் எடுக்கும் கோலார் தங்க சுரங்கம்... பழங்குடி மக்களுக்கு சொந்தமான இடம் என்பதை 'தங்கலான்' படத்தின் மூலம் எடுத்து கூறியுள்ள இயக்குனர் பா.ரஞ்சித்... பிரிட்டிஷ் காரர்களால் எப்படி பழங்குடி மக்கள் தங்கம் எடுக்க நிர்பந்திக்க பட்டனர் என்பதையும், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சியுடன் படமாக்கி உள்ளார். அதே சமயம் தேவை இல்லாத சில கருத்துக்கள் இப்படத்தின் உள்ளே திணிக்கப்பட்டது தான் இந்த படத்தின் ட்ரா பேக்காகவும் பார்க்கப்படுகிறது.

ஷாலினி முதல்... லட்சுமி மேனன் வரை சொந்த குரலில் பாடிய ஹீரோயின்களின் ஹிட் பாடல்கள்!

Tap to resize

Thangalaan Less Shows

இதுவரை உலக அளவில் 60 கோடிக்கு மேல் 'தங்கலான்' வசூல் வேட்டை செய்திருந்தாலும், விடுமுறை நாட்கள் கடந்து விட்டதாலும், அடுத்த வாரம் அரை டஜன் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு கார்த்திருப்பதாலும், 'தங்கலான்' படம் தொடர்ந்து திரையரங்கில் ஓடுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பல திரையரங்குகளில் தங்கலான் படத்திற்கு கூட்டமே வரவில்லை என்பது ஒரு காரணம்.
 

Thangalaan join 100 Crore Club

விமர்சன ரீதியிலான வெற்றியை விக்ரமுக்கு 'தங்கலான்' கொடுத்திருந்தாலும்... 100 முதல் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்வது கடினமே என கூறப்படும் நிலையில், இப்படம் வசூல் ரீதியான வெற்றியை பெற தவறி விட்டதாகவே பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு சக்ஸஸ் மீட் வைத்து படக்குழு கொண்டாடி இருந்தாலும், 100 கோடி வெற்றி கிளப்பில் விக்ரமை தங்கலான் இணைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வயிற்றில் குழந்தையோடு.. விஜய் டிவி நாஞ்சில் விஜயன் கையில் ராக்கி கட்டிய இந்திரஜா! வைரல் வீடியோ!
 

Latest Videos

click me!