
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். தனது திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்ட விஜய் இன்று டாப் ஹீரோவாக மாறி உள்ளார். ஆரம்பத்தில் விஜய்யின் சில படங்கள் வெற்றி பெற்றாலும் விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸ் கிடைக்கவில்லை. பூவே உனக்காக படம் அவரின் திரை வாழ்க்கையில் ப்ரேக் த்ரூவாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் விஜய்க்கு பெண்கள், குழந்தைகள் என பல ரசிகர்கள் கிடைத்தனர்.
இதை தொடர்ந்து லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளூம், பிரியமானவளே, குஷி, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான் என பல ஹிட் படங்களில் நடித்தார். பின்னர் திருமலை படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார் விஜய். ஆக்ஷன் ஹீரோவாகவும் பல ஹிட் படங்களை கொடுத்தார். கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார்.
இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் படங்கள் அல்லது விஜய் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானாலே, விஜய் அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். விஜய் படம் என்றாலே கட்டாயம் 200 கோடி வசூலை கடக்கும் என்ற நிலையே உள்ளது. இதனால் விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் விஜய் அழைக்கப்படுகிறார்.
மேலும் நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் விஜய் இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்த விஜய் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய விஜய். 2026 சட்டமன்ற தேர்தல் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். கோட் படத்தை தவிர, ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தையும் முடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் கூறியுள்ளார்..
மற்ற நடிகர்களை போல் ஓய்வுக்கு பின் அரசியலுக்கு வராமல் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட விஜய்க்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் சினிமாவை போலவே அரசியலிலும் விஜய் தடம் பதிப்பாரா என்பது போகபோக தான் தெரியும்.
நடிகர் விஜய் 1999-ம் ஆண்டு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் விஜய் மகன் ஜேசன் விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் திருமண அழைப்பிதழ் தொடர்பான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்த சங்கீதா விஜய்யை பார்க்க லண்டனில் இருந்து சென்னை வந்துள்ளார். சங்கீதாவின் நடவடிக்கைகள் பிடித்துப் போகவே அவரை தனது வீட்டில் அறிமுகம் செய்துள்ளார் விஜய். முதலில் திருமண பேச்சை எடுத்தது விஜய்யின் பெற்றோர் தானாம். அதற்கு விஜய்யும் சங்கீதாவும் ஒப்புதல் தெரிவிக்கவே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி மற்றும் தாய் ஷோபா ஆகியோர் லண்டன் சென்று சங்கீதாவின் பெற்றோரிடம் பேசி உள்ளனர்.
பின்னர் இரு வீட்டாரின் ஒப்புதலுடன் விஜய் சங்கீதா திருமணம் நடைபெற்றது. விஜய் ஒரு கிறிஸ்தவர், சங்கீதா ஹிந்து மதத்தை சேர்ந்தவர். எனினும் ஹிந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் மாலையே திருமண வரவேற்பும் நடைபெற்றது.