
ஷாலினி:
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற நடிகர்களுடன் நடித்த ஷாலினி, தன்னுடைய பருவ வயதில், விஜய்க்கு ஜோடியாக 'காதலுக்கு மரியாதை' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் மிக குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும், அணைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஷாலினியின் தந்தை பாடல்கள் பாடுவதில் ஆர்வம் உள்ளவர் என்பதால்... அவரை பார்த்து வளர்ந்த ஷாலினிக்கும் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம். அதன்படி அஜித்துடன் இவர் முதல் முதலில் நடித்த 'அமர்க்கள'ம் படத்தில் இவர் 'சொந்த குரலில் பாட' என்ற பாடலை பாடி பாடி இருந்தார்.
ஸ்ருதி ஹாசன்:
உலக நாயகன் மகள் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி, ஒரு நடிகையாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தது போல, இவரின் பாடல்களும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவை. 1992-ஆம் ஆண்டு 'தேவர் மகன்' படத்தில் இடம்பெற்ற 'போற்றி பாடடி பெண்ணே' பாடலை பாடிய ஸ்ருதி, இதை தொடர்ந்து... 'ஹேராம்' படத்தில் ராம் ராம்.., 3 படத்தில் கண்ணழகா காலழகா, 'மான் கராத்தே' படத்தில் உன் விழிகளில், 'புலி' படத்தில் 'ஏண்டி ஏண்டி' போன்ற ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் ஸ்ருதி பாடியுள்ளார்.
வயிற்றில் குழந்தையோடு.. விஜய் டிவி நாஞ்சில் விஜயன் கையில் ராக்கி கட்டிய இந்திரஜா! வைரல் வீடியோ!
ஆண்ட்ரியா:
எப்படி திரைப்படங்களில் போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துவாரோ ஆண்ட்ரியா, அதே போல் தன்னுடைய கணீர் குரலால் ரசிகர்களை குத்தாட்டம் போட வைப்பவர். ஒரு பாடகியாக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் நடிகையாக மாறிய ஆண்ட்ரியா, தமிழில் விக்ரம் - சதா நடிப்பில் வெளியான 'அந்நியன்' படத்தில் பாடிய 'கண்ணும் கண்ணும்' நோக்கியா பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய வைத்தது. பின்னர் வானம் படத்தில் இடம்பெற்ற 'நோ மணி நோ மணி', துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற 'கூகிள் கூகிள்' போன்ற படங்கள் மிக பிரபலம்.
அதிதி ராவ்:
கூடிய விரைவில், நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள உள்ள நடிகை அதிதி ராவ், தமிழில் 'ஜெயில்' படத்தில் தனுஷுடன் இணைந்து பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.
அம்மாவின் நம்பிக்கை... ரசிகர்களின் ஆசை! த.வெ.க கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்!
ரம்யா நம்பீசன்:
நடிகை ரம்யா நம்பீசன், ஒரு நடிகை என்றாலும்... சிறு வயதில் இருந்தே முறையாக சங்கீதம் கற்று கொண்டதால், ஒரு பாடகியாகவும் பிரபலமானவர். அந்த வகையில் இவர், மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி இருந்தாலும், தமிழில் விஷால் நடித்த பாண்டியநாடு படத்தில் இடம்பெற்ற 'பை பை பை... கலாச்சி பை' பாடலை பாடி பிரபலமானார். இதை தொடர்ந்து, டமால் டுமீல், சகாப்தம், சகல கலாவல்லவன், முன்னோடி, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற ஏராளமான படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
லட்சுமி மேனன்:
'கும்கி' படத்தில் தன்னுடைய 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனன், சில துள்ளலான பாடல்களை பாடி பிரபலமானவர். அந்த வகையில், ஒரே ஊருல ரெண்டு ராஜா என்கிற படத்தில் 'குக்குறு குக்குறு' என்கிற பாடலை பாடியுள்ளார். இது மட்டும் இன்றி, பிரஷாந்த் நடித்த சாகசம் படத்தில் இடம்பெற்ற 'டேசி கேர்ள்' பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.