
தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் இருக்கின்றனர். வித்தியாசமான கதைக்களம், புதுமையான திரைக்கதை, மேக்கிங் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர். பெரிய பட்ஜெட் படங்கள், உச்ச நடிகர்களின் படங்கள் அதிக வசூல் செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவான பல அதிக வசூல் செய்து அசத்தி உள்ளன. அந்த வகையில் தமிழ்த் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசியல் நையாண்டி படமாக உருவான LKG படத்தில் RJ பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் லீட் ரோலில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரபு இயக்கிய இப்படம் சுமார் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் இந்த பாக்ஸ் ஆபிஸில் ரூ.15 கோடியை வசூல் செய்தது. பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட 5 மடங்கு லாபம் ஈட்டிய படமாக இந்த படம் அமைந்தது..
பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவானது. விஷால், அர்ஜுன் சர்ஜாமற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரூ.14 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த கோலமாவு கோகிலா. இந்த படம் நெல்சன் திலீப்குமார் இயக்கிய முதல் படமாகும். க்ரைம் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 43 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
சி பிரேம்குமார் இயக்கத்தில் உருவான 96′ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கிளாகிக் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. ரூ. 18 கோடி பட்ஜெட்டில் யாரிக்கப்பட்ட இந்த படம் ரூ 55 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம் குமார் இயக்கத்தில் உருவான ராட்சசன் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ 20 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை 1 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் 10 கோடி வசூலித்தது. ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் பல திரைப்பட விருதுகளை கூட வாங்கியுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவான படம் மாநகரம். இது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமாகும். சந்தீப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்ரீ, சார்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
ஆர் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான படம் டிமாண்டே காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் ஷெட்டி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரூ.2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
மம்முட்டி, அஞ்சலி, பேபி சாதனா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த பேரன்பு ஒரு உணர்வுபூர்வமான குடும்பப் படம். ராம் இயக்கிய இப்படம் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.35 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
விஜய், ரஜினி, கமலையே ஓடவிட்டவர்... சிறுத்தை சிவாவின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவங்கள் ஒரு பார்வை
கைதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தில் கார்த்தி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.106 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.