விஜய், ரஜினி, கமலையே ஓடவிட்டவர்... சிறுத்தை சிவாவின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவங்கள் ஒரு பார்வை

First Published | Aug 20, 2024, 11:50 AM IST

சிறுத்தை சிவா இயக்கிய படங்களுடன் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன விஜய், ரஜினி மற்றும் கமல் படங்கள் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

siruthai siva movies clash with Kamal, Rajini, Vijay Films

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. அப்படத்துக்கு போட்டியாக ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும் ரிலீஸ் ஆக உள்ளது. ஒரே நாளில் இரண்டு பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் யாருக்கு வசூல் ரீதியாக வெற்றி கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்த நிலையில், இதற்கு முன்னர் சிறுத்தை சிவா இயக்கிய படங்கள் கமல், ரஜினி, விஜய் படங்களுடன் மோதியபோது அதன் ரிசல்ட் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Kavalan, Siruthai, Aadukalam

சிறுத்தை vs காவலன்

இயக்குனர் சிவா இயக்குனராக அறிமுகமான திரைப்படம் சிறுத்தை. இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. அந்த ஆண்டு சிறுத்தை படத்துடன் விஜய்யின் காவலன், தனுஷின் ஆடுகளம் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின. இந்த மூன்று படங்களுமே ஹிட் அடித்தன. அதிலும் சிறுத்தை படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை வாரிக்குவித்தது. 

Tap to resize

Veeram vs Jilla

வீரம் vs ஜில்லா

நடிகர் அஜித்துடன் இயக்குனர் சிவா முதல்முறையாக இணைந்து பணியாற்றிய படம் வீரம். கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடித்த ஜில்லா படத்துடன் போட்டிபோட்டு ரிலீஸ் ஆனது வீரம். இந்த மோதலில் ஜில்லா படத்தைக் காட்டிலும் வீரம் படத்துக்கு அதிக வசூல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வயிற்றில் குழந்தையோடு.. விஜய் டிவி நாஞ்சில் விஜயன் கையில் ராக்கி கட்டிய இந்திரஜா! வைரல் வீடியோ!

Thoongavanam vs Vedalam

வேதாளம் vs தூங்காவனம்

சிறுத்தை சிவா - அஜித் காம்போவில் வெளிவந்த இரண்டாவது படம் வேதாளம். இப்படத்தில் நடிகர் அஜித் டான் ஆக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படத்துக்கு போட்டியாக கமலின் தூங்காவனம் படம் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை சந்தித்தன. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வேதாளம் முதலிடம் பிடித்தது.

Viswasam vs Petta

விஸ்வாசம் vs பேட்டஅஜித் - சிவா கூட்டணியில் வெளிவந்த நான்காவது படம் தான் விஸ்வாசம். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. அப்படத்துக்கு போட்டியாக ரஜினியின் பேட்ட படம் ரிலீஸ் ஆனது. ஆனால் விஸ்வாசம் படம் பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

vettaiyan vs Kanguva

இப்படி டாப் நடிகர்களுடன் போட்டியிட்டு வெற்றியை ருசிக்கும் சிவா, அடுத்ததாக கங்குவா மூலம் வேட்டையனை வேட்டையாடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... 15 வருஷமா அப்பாவை நைட்டு எங்க வீட்டுக்கே வர விடல; படாதபாடு படுத்திய சாவித்ரி - ஜெமினி கணேசன் மகள் உடைத்த உண்மை

Latest Videos

click me!