கோலிவுட்டில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். சினிமாவில் மட்டுமின்றி ரியல் லைஃபிலும் இவர் காதல் மன்னன் தான். இவருக்கு நான்கு மனைவிகள் அதில் மூத்த மனைவியின் பெயர் அலமேலு, இரண்டாவது மனைவி பெயர் புஷ்பவல்லி, மூன்றாவது மனைவி பெயர் சாவித்ரி, நான்காவது மனைவி பெயர் ஜூலியானா ஆண்ட்ரூ. இதில் ஜெமினி கணேசனின் மூத்த மனைவி 4 மகள்கள், இரண்டாவது மனைவிக்கு 2 மகள்கள், மூன்றாவது மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
24
Gemini Ganesan wife Savitri
ஜெமினி கணேசனின் முதல் மனைவிக்கு மகளாக பிறந்த கமலா செல்வராஜ், தன் தந்தை குறித்தும், சாவித்ரி அவரை என்னென்ன டார்ச்சர் செய்தார் என்பது பற்றியும் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் அதில் அவர் கூறியதாவது : “சினிமா துறையில் இருந்த அத்தனை பெண்களுக்கும் என் அப்பா மேல ஒரு கண்ணு இருக்கும். அவரை பாக்காத, மயங்காத பெண்களே இல்ல. சாவித்ரி, இரவு கொட்டும் மழையில் எங்க வீட்டுக்கு ஓடி வந்த பெண்.
அவர் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவருக்கு தாலி கட்டி மனைவியாக வாழ்க்கை கொடுத்தார். சாவித்ரிக்கு கையெழுத்து போட தெரியாது, தமிழ் பேச தெரியாது அதையெல்லாம் அவளுக்கு கற்றுத்தந்தது என் அப்பா தான். மேலும் அவருக்கு கார் ஓட்டவும், குதிரை சவாரி செய்யவும் சொல்லி கொடுத்தது அப்பா தான். சாவித்ரி ரொம்ப பொசசிங், 15 வருஷம் எங்க அப்பாவ மிரட்டி, அவரை நைட்டு எங்க வீட்டுக்கு வர விடாம அவ வீட்லயே வச்சிருந்தா.
44
Gemini Ganesan Savitri life
எங்க அப்பா மேல் அன் அம்மா அலமேலுவுக்கு கொள்ள காதல், அதனால் தான் அவரை விவாகரத்து செய்யாமலேயே இருந்தார். உசுரே போனாலும் அவரை விட்டு போக மாட்டாங்க. அந்த மாதிரி ஒரு குடும்பத்தை களைச்சவ சாவித்ரி. அவங்க பொண்ணு அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தான் சாவித்ரி அண்ணாநகர் போனார். முறையாக வருமானவரி தாக்கல் செய்யாமல், கண்டவங்களோடு உறவு வைத்துக் கொண்டதால் எல்லாவற்றையும் இழந்துவிட்டால் சாவித்ரி என கமலா செல்வராஜ் கூறி இருக்கிறார்.