மகள் மாதிரினு சொல்லி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணிட்டாரு - பாலு மகேந்திராவின் காதல் லீலைகளை சொன்ன வடிவுக்கரசி

Published : Aug 20, 2024, 01:48 PM ISTUpdated : Aug 20, 2024, 10:19 PM IST

அன்பு மகளேனு எழுதி கிஃப்ட் எல்லாம் கொடுத்துட்டு அந்த நடிகையையே பாலு மகேந்திரா திருமணம் செய்துகொண்டதாக வடிவுக்கரசி கூறி உள்ளார்.

PREV
14
மகள் மாதிரினு சொல்லி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணிட்டாரு - பாலு மகேந்திராவின் காதல் லீலைகளை சொன்ன வடிவுக்கரசி
Vadivukkarasi says about Balu Mahendra love Marriage with shoba

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி ஆகச்சிறந்த இயக்குனராகவும் வலம் வந்தவர் பாலு மகேந்திரா. இன்று கோலிவுட்டில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் பாலா, வெற்றிமாறன் போன்றவர்கள் பாலு மகேந்திராவின் சிஷியர்கள் தான். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தற்போது அவரிடம் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்டி வருகிறார்கள். இப்படி தலைசிறந்த படைப்பாளிகளை செதுக்கிய பாலு மகேந்திரா, சிக்கிய சர்ச்சைகளும் ஏராளம்.

24
Balu mahendra

நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பாலு மகேந்திரா நடிகை ஷோபாவை கடந்த 1978-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நடிகை மெளனிகாவை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பாலு மகேந்திரா, இந்த நிலையில், ஷோபா - பாலு மகேந்திராவின் திருமணம் தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்ததாக நடிகை வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... என் வாழ்க்கை என் விருப்பம்; அதை கேட்க நீங்க யார்? போதை பார்ட்டி விவகாரம் குறித்து நடிகை ஹேமா ஓபன் டாக்

34
Balu mahendra - shoba

அதில் அவர் கூறியதாவது : “எனக்கு சினிமாவில் பர்ஸ்ட் பிரண்ட் ஷோபா தான். அவருடம் மிகவும் நெருங்கி பழகினேன். கேகே நகரில் உள்ள அவரதுஅ வீட்டுக்கும் அடிக்கடி போவேன். ஏணிப்படிகள் நடிக்கும்போதே நாங்கள் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டோம். அதன்பின்னர் ஷோபா சினிமாவில் பிசியாகிவிட்டார். அப்போது பசி படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு வாழ்த்து சொல்ல நேரில் சென்றேன்.

44
vadivukkarasi

அப்போது தான் ஷோபா - பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டதாக சொன்னார்கள். அது எனக்கு மிகப்பெரிய ஷாக் ஆக இருந்தது. அதைப்பற்றி ஷோபா என்கிட்ட எதுவுமே சொல்லவில்லை. ஒருமுறை பாலு மகேந்திரா இலங்கையில் இருந்து வரும்போது ஷோபாவுக்கு கிஃப்ட் கொடுத்திருந்தார். அதில் அன்பு மகளே என்று எழுதி தான் கிஃப்ட் கொடுப்பார். மகள் மாதிரி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணிருக்காரேனு எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது” என வடிவுக்கரசி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... தளபதி விஜய் - சங்கீதாவின் திருமண அழைப்பிதழை பார்த்திருக்கீங்களா? வைரல் போட்டோ..

click me!

Recommended Stories