நடிகையை கட்டிப்பிடிக்கும் காட்சி; வேண்டுமென்றே 17 டேக் வாங்கிய நடிகர் - வெளிச்சம் போட்டு காட்டிய ஹேமா கமிட்டி

First Published | Aug 20, 2024, 2:35 PM IST

நடிகையுடன் கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடிக்க பிரபல நடிகர் ஒருவர் வேண்டுமென்றே 17 டேக் வாங்கியதாக ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

hema committee report

மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்களும் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. மலையாள சினிமா துறையில் முழுக்க முழுக்க பெண் வெறுப்பு நிலவுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பாலியல் சீண்டல்களுக்கு உடன்பட வேண்டும் என முன்னணி நடிகர்கள் வலியுறுத்தியதாக கமிட்டி முன் பல பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கையின் 55, 56வது பக்கங்களில் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. 

Malayalam cinema

மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல் என்பது பரவலாக உள்ளது. நடிகைகள் அச்சத்துடனேயே வாக்குமூலம் அளித்துள்ளார்களாம். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் அட்ஜஸ்மெண்ட் செய்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அதில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் பயத்தினால் போலீசை அணுகுவதில்லை. புகார் அளித்தால் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பயப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... அத்துமீறும் நடிகர்கள்... மலையாள திரையுலகில் தலைதூக்கும் அட்ஜஸ்மெண்ட் - தோலுரித்த ஹேமா கமிட்டி

Tap to resize

Actress allegation in Hema Committee report

மேலும் பாலியல் தேவைகளுக்கு இணங்காதவர்களை முத்திரை குத்தி சினிமாவில் இருந்து நீக்குகின்றனர் என்றும் அதையும் மீறி புகார் அளிப்பவர்களும் சினிமாவில் இருந்து நீக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மலையாள சினிமாவை ஒரு மாஃபியா கும்பல் கட்டுப்படுத்துவதாகவும், சினிமாவில் நடிக்க வந்துவிட்டு, தங்களுக்கு அடிபணியவில்லை என்றால் அந்த நடிகையை மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து சித்திரவதை செய்வார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Hema committee report details

அப்படித் தான் பாலியல் தொல்லைக்குள்ளான நடிகை ஒருவரை கட்டிப்பிடிக்கும் சீனில் நடிக்க வேண்டும் என ஹீரோ ஒருவர் கட்டாயப்படுத்தினாராம். அதுமட்டுமின்றி அந்த சீனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நடிகர் 17 டேக் வாங்கினாராம். இந்த விவகாரத்தில் நடிகரை திட்டாமல் நடிகையை இயக்குனர் சரமாரியாக திட்டியதாகவும் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக ஹேமா கமிட்டி அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். 

'பாலியல் ரீதியாக அடிபணியும் நபர்களுக்கு மட்டுமே நல்ல உணவு கிடைக்கும். நிர்வாணமாக நடிக்க நடிகைகளுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி உள்ளது. இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவ்வாறு நடிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் என்பன போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களும்  ஹேமா கமிட்டி அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை தான் தற்போது நாடு முழுவதும் பேசுபொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பல தியேட்டர்களில் வாஷ் அவுட்டான 'தங்கலான்' 100 கோடியை எட்ட முடியாமல் தவிக்கிறாரா விக்ரம்?

Latest Videos

click me!